வெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் 6 அற்புத நன்மைகள்: என்னென்ன தெரியுமா?
நம் அன்றாடம் சாப்பிடும் வெண்டைக்காயில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளது.
வெண்டைக்காய் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளின் நல்ல மூலமாகும்.
சர்க்கரை நோய், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு வெண்டைக்காய் ஒரு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.
அந்தவகையில், வெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் 6 அற்புத நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
கிடைக்கும் 6 நன்மைகள்
1. உடலில் இல்ல இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.
2. டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு வெண்டைக்காய் சிறந்தது.
3. செரிமானம், ஹைட்ரேஷன் மற்றும் மெட்டபாலிசத்துக்கு உதவுகிறது.
4. அதிக நார்ச்சத்து உள்ளதால் எடை குறைய உதவுகிறது.
5. இரத்த அழுத்தத்தையும், இதய ஆரோக்கியத்தையும் பராமரிக்கிறது.
6. வயிற்றின் பாதுகாப்பை மேம்படுத்தி, அல்சர் குணமடைய உதவுகிறது.
வெண்டைக்காய் நீரின் பயன்கள்
அதற்கு 2-3 புதிய வெண்டைக்காயை எடுத்து, அவற்றை நன்கு கழுவி, முனைகளை வெட்டி, சிறிய கீற்றுகளை நறுக்கிக்கொள்ளவும்.
பின் ஒரு கிளாஸ் தண்ணீரில் நறுக்கிய வெண்டைக்காயை இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
அடுத்து இந்த தண்ணீரை வடிகட்டி, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.
இது நார்ச்சத்து அதிகமுள்ள பானம் என்பதால் செரிமானத்தை மெதுவாக்கி, ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
மேலும், இந்த பானம் நம் உடலில் மெட்டபாலிசத்தை தூண்டுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |