அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் 6 உணவுகள்.., என்னென்ன தெரியுமா?
பொதுவாக ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் முடி உதிர்வு.
அந்தவகையில், அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் 6 உணவுகள் குறித்து பார்ப்போம்.
என்னென்ன உணவுகள்?
1. கீரை- கீரைகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் தலைமுடி உதிர்வை தடுக்கவும், முடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது.
2. முட்டை- முட்டையில் புரோட்டீன் அதிகம் உள்ளதால் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
3. எள்ளு விதை- எள்ளு விதைகளில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிகம் உள்ளன. இதை சாப்பிடுவதால் தலைமுடி உதிர்வை குறைத்து முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
4. பட்டை- பட்டையில் உள்ள சின்னமல்டிஹைடு இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, தலைமுடி உதிர்வதைத் தடுத்து, அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
5. பழம் மற்றும் காய்கறிகள்- தலைமுடி உதிர்வை தடுத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்க ஆரஞ்சு நிற பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் ஒன்று சாப்பிடலாம்.
6. நட்ஸ்- முடி உதிர்தல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு கையளவு பாதாம், வால்நட்ஸ், பிஸ்தா, முந்திரி என நட்ஸ்களை சாப்பிடுவது நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |