ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஆறு நாடுகளுக்கு மறுக்கப்பட்ட அழைப்பு: வெளிவந்துள்ள முழு பட்டியல்!
பிரித்தானிய மகாராணி இறுதிச் சடங்கில் பங்கேற்க ஆறு நாடுகளுக்கு அழைப்பு இல்லை.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்பது உறுதி.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற உலக தலைவர்களுக்கு அனுப்பட்ட அழைப்பிதழ்களில், ஆறு நாடுகள் மட்டும் விலக்கப்பட்டுள்ளன.
பிரித்தானியாவை கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 9ம் திகதி வியாழக்கிழமை ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரலில் தனது 96வது வயதில் உயிரிழந்தார்.
இந்தநிலையில் மகாராணியின் இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வெஸ்ட்மின்ஸ்டர் அபே-யில் (Westminster Abbey) வைத்து செப்டம்பர் 19ம் திகதி திங்கட்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அரசியல் தலைவர்கள் முதல் தனித்துவமான அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள உயரதிகாரிகள் வரை பல விருந்தினர்கள் பிரித்தானியாவிற்கு வருகை புரிந்து வருகின்றனர்.
இவ்வாறு ராணியின் இறுதிச் சடங்கு விழாவில் பங்கேற்பதற்காக அனைத்து உலக தலைவர்களுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்ட நிலையில், ஆறு நாடுகளுக்கு மட்டும் பிரித்தானிய அதிகாரிகள் தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் நாடுகளுடன் பிரித்தானியா பகிர்ந்து கொள்ளும் உறவை கருத்தை கொண்டு அழைப்பிதழ்கள் வழங்கப்படவில்லை.
அந்த வகையில் ரஷ்யா, பெலாரஸ்,மியான்மர், வெனிசுலா, சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அரச குடும்ப இறுதிச் சடங்கிற்கு அழைப்பு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
AFP
மேலும் வடகொரியா, ஈரான் மற்றும் நிகரகுவா ஆகிய நாடுகளுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன, ஆனால் அவை பிரித்தானிய தூதர் பிரதிநிதிகளுக்கு அனுப்பப்பட்டதே தவிர, அரச தலைவர்களுக்கு அனுப்படவில்லை என தகவல் தெரியவந்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: மேகன் மார்க்ல் “பிரித்தானியாவிற்கு மீண்டும் திரும்ப தயார்” ராயல் நிபுணர் நீல் சீன் தகவல்!
பல உலக தலைவர்கள் ராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன், கனடாவின் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸின் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் பிரித்தானியாவிற்கு செல்லவுள்ளனர்.