மேகன் மார்க்ல் “பிரித்தானியாவிற்கு மீண்டும் திரும்ப தயார்” ராயல் நிபுணர் நீல் சீன் தகவல்!
மேகன் மீண்டும் பிரித்தானியா திரும்ப தயாராக இருக்கலாம் என ராயல் நிபுணர் தகவல்.
பிரித்தானிய மக்களின் அன்பான வரவேற்பால் மேகன் மார்க்ல் மனம் மாறி இருக்கலாம் என தகவல்.
பொதுமக்களின் அன்பான வரவேற்பால் மேகன் மார்க்ல்(Meghan Markle) இங்கிலாந்திற்கு திரும்பத் தயாராக இருக்கலாம் என ராயல் நிபுணர் நீல் சீன்(Neil Sean) தெரிவித்துள்ளார்.
இளவரசர் ஹாரி அமெரிக்க பெண்ணான மேகனை திருமணம் செய்து கொண்டதை தொடர்ந்து, அரச குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளால் இளவரசர் ஹாரி தனது அரச பட்டங்கள் அனைத்தையும் துறந்ததுடன், இங்கிலாந்தில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடிபெயர்ந்தார்.
Getty Images
மேகன் மார்க்லை இளவரசர் ஹாரி திருமணம் செய்து கொண்டதே அரச குடும்ப மோதலுக்கு முக்கிய காரணம் என அரச குடும்ப மூத்த அதிகாரிகள் மற்றும் ராயல் விசுவாசிகள் குற்றம் சாட்டினர்.
அதுமட்டுமின்றி மிகவும் நெருக்கமான உறவு கொண்டு இருந்த சகோதரர்களான இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரிக்கு மத்தியிலும் உறவு விரிசல் ஏற்பட்டது.
PA
இந்த விரிசல் பல்வேறு அரச விழாக்களில் சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இறுதியாக பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து நடைபெற்றுள்ளது.
பல ஆண்டுகளாக அரச விழாக்களில் இணைந்து காணப்படாத இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி, இளவரசிகள் கேட் மற்றும் மேகன் நால்வரும், பிரித்தானிய மகாராணியின் மறைவை தொடர்ந்து, ஒரே காரில் இருந்து வெளியேறி பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினர்.
PA
இது பிரித்தானிய மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இளவரசி மேகன் மார்க்ல் மீண்டும் பிரித்தானியாவிற்கு திரும்ப தயாராக இருக்கலாம் என ராயல் நிபுணர் நீல் சீன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நீல் சீன் தெரிவித்துள்ள தகவலில், பிரித்தானிய மகாராணிக்காக துக்கப்பட்டவர்களை சந்தித்த மேகன் மார்க்லே-வுக்கு கிடைத்த அன்பான வரவேற்பால் பிரச்சனைகள் சரிசெய்யப்பட்டதாக உணர்ந்துள்ள மேகன் மார்க்லே எதிர்காலத்தில் பிரித்தானியாவிற்கு திரும்ப தயாராக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
Getty Image
இளவரசர் ஹாரி-யை அமெரிக்காவுக்கு அழைத்து சென்று, அரச குடும்ப படகையே அதிர்ச்சியடைய வைத்த மேகனுக்கு, பிரித்தானிய மக்கள் அளித்த வரவேற்பால், இங்கிலாந்து பொதுமக்களால் தான் விரும்பப்படுவதாக அவர் உணர ஊக்குவித்து இருக்கும் என தெரிவித்தார்.
மேலும் ஒரு கட்டத்தில் பிரித்தானியாவிற்கு திரும்புவதற்கு கூட தயாராக இருக்கலாம் என நீல் சீன் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: ராணிக்கு அஞ்சலி செலுத்த காத்திருந்த சிறுமி: இன்ப அதிர்ச்சி கொடுத்த இளவரசி கேட்
தனது யூடியூப் சேனலில் பேசிய நீல் சீன், மேகன் பொதுமக்களை சந்திக்க தயாராக இருந்தார், பிரித்தானியாவில் குறிப்பாக பொதுமக்கள் அவளை எப்படி உணருவார்கள் என்று அவள் பயந்தாள், ஆனால் அந்த அச்சங்கள் அனைத்தும் மிக விரைவாக அகற்றப்பட்டன எனத் தெரிவித்தார்.