ராணிக்கு அஞ்சலி செலுத்த காத்திருந்த சிறுமி: இன்ப அதிர்ச்சி கொடுத்த இளவரசி கேட்
சாண்ட்ரிங்ஹாம் மாளிகையின் பிரதான வாயில்களில் ராணிக்காக விடப்பட்ட பூச்செண்டுகளை பார்வையிட்ட வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசி.
ராணியின் அஞ்சலிக்கு நீண்ட நேரம் காத்து இருந்த எட்டு வயது சிறுமியை தன்னுடன் அழைத்து சென்ற இளவரசி கேட்.
பிரித்தானிய மகாராணிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நீண்ட நேரம் காத்து இருந்த எட்டு வயது சிறுமியை வேல்ஸ் இளவரசி கேட் தன்னுடன் அழைத்து சென்று அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் ராணிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அரச குடும்ப அரண்மனை வாயில்களில் குவிந்து வருகின்றனர்.
PA
இவ்வாறு கூடும் பொதுமக்கள் பிரித்தானிய மகாராணிக்கு மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்துவதற்காக பிரித்தானிய அரச வாயில்களில் பூச்செண்டுகளை சமர்ப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் Norfolk-கில் உள்ள சாண்ட்ரிங்ஹாம் மாளிகையின் பிரதான வாயில்களில் ராணிக்காக விடப்பட்ட பூக்களின் கடலைப் பார்வையிட வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் இருவரும் வந்திருந்தனர்.
Getty Image
அப்போது ராணியின் மறைவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக நீண்ட நேரம் காத்து இருந்த எட்டு வயது சிறுமி எலிசபெத் சுல்கோவ்ஸ்காவை பார்த்து இனிய சைகை செய்த இளவரசி கேட், எலிசபெத் சுல்கோவ்ஸ்காவை தன்னுடன் அழைத்து சென்று ராணிக்காக அவர் கொண்டு வந்து இருந்த கோர்கி டெடி மற்றும் பூச்செண்ட் ஒன்றை அஞ்சலிக்காக வைக்க உதவினார்.
இதையடுத்து பேசிய எலிசபெத், இளம் அரச குடும்ப உறுப்பினர் கேட் உடன் அஞ்சலி செலுத்தியது மிகவும் மகிழ்ச்சி அளித்ததாக தெரிவித்தார்.
PA
பிரித்தானிய மகாராணிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கிங்ஸ் லின் ஹோவர்ட் ஜூனியர் பள்ளியின் தலைமை ஆசிரியர் கிரிகோரி ஹில் ஏழு முதல் ஒன்பது வயது வரையிலான குழந்தைகளை சாண்ட்ரிங்ஹாம் மாளிகைக்கு அழைத்து வந்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: ராணியின் இறுதிச் சடங்கு விழா: ரஷ்ய தரப்பினை அழைக்க மறுத்த பிரித்தானிய அதிகாரிகள்
இளவரசி கேட், எலிசபெத்தை அஞ்சலிக்காக அழைத்து சென்றதால், எலிசபெத் மிகவும் அதிர்ச்சி அடைந்தார், அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சியுடன் அழுதார் என்று தலைமை ஆசிரியர் கிரிகோரி ஹில் தெரிவித்தார்.
மேலும் இது அற்புதமான வாய்ப்பு என்றும் அவர் தெரிவித்தார்.