பிறந்து 6 நாட்களே ஆன குழந்தைக்கு டிமேட் கணக்கு தொடங்கி சாதனை
india youngest demat account holder is 6 day baby from delhi: டெல்லியை சேர்ந்த ஆர்யா கோயல் என்ற பெண் குழந்தை பிறந்த 6வது நாளிலே அதன் பெற்றோர் குழந்தைக்கு டிமேட் கணக்கு தொடங்கியுள்ளனர்.
பிறந்து 6 நாட்களே ஆன குழந்தைக்கு டிமேட் கணக்கு
இளம் வயதிலேயே, குழந்தைகளுக்கு சேமிப்பு, முதலீடு உள்ளிட்டவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும் என நிதிசார் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே போல், பல பெற்றோர்களும் தங்கள் குழந்தை பிறந்த உடன், குழந்தை பெயரில் வங்கி கணக்கு தொடங்கி சேமிப்பை தொடங்குகின்றனர்.
இந்நிலையில், டெல்லியை சேர்ந்த ஒரு பெற்றோர் தங்களது குழந்தை பிறந்த 6வது நாளிலே குழந்தைக்கு டிமேட் கணக்கு (demat account) தொடங்கியுள்ளனர்.

டிமேட் கணக்கு என்பது முதலீட்டாளர்கள், பங்குகள், பத்திரங்கள் உள்ளிட்ட நிதிப் பத்திரங்களை மின்னணு வடிவில் வைத்திருக்க அனுமதிக்கிறது.
டெல்லியை சேர்ந்த ஆர்யா கோயல் என்ற பெண் குழந்தை நவம்பர் 6 ஆம் திகதி பிறந்த நிலையில், அடுத்த 6வது நாளிலே நவம்பர் 13 அன்று பாக்கெட்ஃபுல் என்ற தரகுத் தளம் மூலம் அவரது பெற்றோர் டிமேட் கணக்கு திறந்துள்ளனர்.
டிமேட் கணக்கு மட்டுமல்லாது 6 நாளிலே ஆதார்,வங்கிக் கணக்கு, PAN அட்டை என தேவையான அனைத்தையும் ஏற்பாடு செய்துள்ளனர்.
அந்த குழந்தை 18 வயது ஆகும் வரை அந்த கணக்கை அவரது பெற்றோர்கள் நிர்வகிப்பார்கள்.
முன்னதாக கேரளாவைச் சேர்ந்த 12 நாள் குழந்தையான அர்ஷ் அகர்வாலின் பெற்றோர், அக்யூமென் கேப்பிட்டல் மார்க்கெட் மூலம் ஆகஸ்ட் 12, 2026 அன்று டிமேட் கணக்கு திறந்ததே சாதனையாக இருந்தது.