2035 ஆம் ஆண்டிற்குள் மிகப்பெரிய மதமாக இஸ்லாம் உருவெடுக்கும் - Pew நிறுவனம் கணிப்பு
pew predicts islam will be most populated religion before 2035: வாஷிங்டனைத் தளமாகக் கொண்ட Pew ஆராய்ச்சி மையம், 25 ஆண்டுகளுக்கு மேலாக மத மக்கள்தொகை தொடர்பான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.
இந்த நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், 2035 ஆம் ஆண்டுக்குள் முஸ்லீம்களின் எண்ணிக்கை கிறிஸ்தவர்களை விட அதிகரித்து உள்கைன் மிகப்பெரிய மாதமாக இஸ்லாம் உருவெடுக்கும் என தெரிவித்துள்ளது.
மிகப்பெரிய மதமாக உருவெடுக்கும் இஸ்லாம்
மக்கள்தொகையில் 99.98 சதவீதத்தைக் கணக்கில் கொண்ட 201 நாடுகள் மற்றும் பிரதேசங்களை ஆய்வு செய்த இந்தக் கணிப்பு, 2020 முதல் 2070 வரையிலான ஆண்டுகளில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள், இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் பிறர் ஆகிய7 மதக் குழுக்கள் மற்றும் பிரிவுகளின் புவியியல் பரவல் மற்றும் எதிர்கால மாற்றங்களை உள்ளடக்கியது.

பியூவின் சமீபத்திய மதிப்பீடுகளின்படி, 2020 ஆம் ஆண்டில் உலகளவில் 227 கோடி கிறிஸ்தவர்களும், 202 கோடி முஸ்லிம்களும் இருந்தனர். 2035 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 257 கோடி முஸ்லிம்களாகவும் 252 கோடி கிறிஸ்தவர்களாகவும் இருக்கும் என கணிப்பு தெரிவித்துள்ளது.
முஸ்லிம் பெண்களுக்கு 3.1 குழந்தைகள் என்ற அளவில் கருவுறுதல் விகிதம் காணப்பட்டது. அதேசமயம், இரண்டாவது மிக உயர்ந்த கருவுறுதல் விகிதத்தைக் கொண்ட கிறிஸ்தவப் பெண்களுக்கு 2.5 குழந்தைகள் என்ற அளவில் இருந்தது. கிறிஸ்தவர்களின் வளர்ச்சி 30% ஆகவும், முஸ்லிம்களின் வளர்ச்சி 80% ஆகவும் இருக்கும் என தெரிவித்துள்ளது.
பியூவின் மத ஆராய்ச்சி இயக்குநரான ஆலன் கூப்பர்மேன், கணிக்கப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் பெருக்கத்தில் பெரும்பாலானவை, அவர்கள் ஏற்கனவே பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளில் நிகழ்வதாகவும், மதமாற்றம் ஒரு சிறிய பங்கையே வகிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2020-2025 காலகட்டத்தில் மற்ற எந்த மதப் பெண்களை விடவும் முஸ்லிம் பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். கிறிஸ்தவத் தாய்மார்களுக்குப் பிறந்த 208 மில்லியன் குழந்தைகளுடன் ஒப்பிடுகையில், முஸ்லிம் தாய்மார்களுக்கு சுமார் 252 மில்லியன் குழந்தைகள் பிறந்தன என மதிப்பிட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா, ஐரோப்பா
மேலும், அடுத்த 40 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவில் கிறிஸ்தவர்களின் பெரும்பான்மை இருக்காது. 2065 ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 50% க்கும் கீழே குறைந்துவிடும் எனவும், கனடாவில், 2030 ஆம் ஆண்டுக்குள் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 50% க்கும் கீழ் குறையும் எனவும் கணித்துள்ளது.

இரு நாடுகளிலும், இந்த வீழ்ச்சிக்கான ஒரு முக்கிய காரணம், எந்தவொரு மத சார்பும் இல்லாதவர்களின் எண்ணிக்கை ஒரே நேரத்தில் அதிகரிப்பதே ஆகும்.
2070 ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பாவில் வாழும் மக்களின் எண்ணிக்கை 17% சுருங்கும் என்றும், அங்குள்ள கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு குறைந்து, 505 மில்லியனிலிருந்து 324 மில்லியனாக ஆகும் எனவும், ஐரோப்பாவின் மக்கள் தொகையில் முஸ்லிம்களின் சதவீதம் 6%-இலிருந்து 13%-ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிரிக்கா
வரும் 10 ஆண்டுகளில், உலகின் மக்கள்தொகை வளர்ச்சியில் பெரும்பகுதி ஆப்பிரிக்காவில், குறிப்பாக சகாரா பாலைவனத்திற்குத் தெற்கே நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அங்கு பெரும்பாலான மக்கள் கிறிஸ்தவர்களாகவோ அல்லது முஸ்லிம்களாகவோ உள்ளனர். அப்பகுதியின் அதிக கருவுறுதல் விகிதமும், அதிகரித்து வரும் ஆயுட்காலமும் இவ்விரு மதத்தினரின் உலகளாவிய எண்ணிக்கையை அதிகரிக்கும் என பியூ கணித்துள்ளது.
இந்துக்கள், மதத்துடனும் தொடர்பில்லாதவர்கள்
இந்துக்கள் மற்றும் யூதர்களின் முழுமையான எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், உலக மக்கள்தொகையில் அவர்களின் சதவீதம் குறையும் என கணித்துள்ளது.
சீனா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் எதிர்பார்க்கப்படும் சரிவுகளின் காரணமாக, பௌத்தர்கள் எண்ணிக்கையிலும் உலக மக்கள்தொகையில் அவர்களின் பங்கிலும் குறைவார்கள் என அது கணித்துள்ளது.
பல நாடுகளில், நாத்திகர்கள், எந்தவொரு மதத்துடனும் தொடர்பில்லாதவர்களான nones எனப்படும் பிரிவினரின் எண்ணிக்கை சீராகப் பெருகி வருகிறது.
செக் குடியரசு, ஜப்பான், நெதர்லாந்து, நியூசிலாந்து, உருகுவே மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 10 நாடுகளில், 'மதச்சார்பற்றவர்கள்' ஏற்கனவே மக்கள்தொகையில் பெரும்பான்மையாக உள்ளனர்.
2070 ஆம் ஆண்டுக்குள் தென் கொரியா, பிரான்ஸ் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இந்தக் குழுவில் இணையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவர்கள் மதத்தை விட்டு வெளியேறுவது அல்லது மதம் மாறுவதைக் காட்டிலும், முஸ்லிம்கள் தங்கள் சமூகத்தில் மிகக் குறைவான இழப்புகளையே சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.