கர்ப்பிணியுடன் வயிற்றில் இருந்த குழந்தை... கொடூர கும்பலால் ஏற்பட்ட துயரம்: பகீர் சம்பவம்
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் கர்ப்பிணி உள்ளிட்ட 6 பேரை கும்பல் ஒன்று துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை மொத்தமாக உலுக்கியுள்ளது.
இண்டியானாபொலிஸ் நகரில் நடந்த இந்த கொலைவெறித் தாக்குதலானது திட்டமிட்டதாக இருக்க வாய்ப்புள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கொடூர தாக்குதலில் சிறுவன் ஒருவனும் இலக்கானதாகவும், ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளூர் நேரப்படி ஞாயிறு அதிகாலையில் சுமார் 4 மணிக்கு நடந்த இத்தாக்குதலில், துப்பாக்கி குண்டு காயங்களுடன் சிறுவன் ஒருவன் பொலிசாரின் பார்வையில் சிக்கிய நிலையிலேயே, இந்த கொடூர சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனையடுத்து விசாரணையை முன்னெடுத்த பொலிசார், குடியிருப்பு ஒன்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலர் சடலமாக கிடப்பதை கண்டறிந்துள்ளனர்.
குறித்த தாக்குதலில் சிறுவன் மட்டுமே தப்பிய நிலையில், தாக்குதலுக்கு காரணமான சம்பவம் தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை.
மேலும், இந்த தாக்குதலில் கர்ப்பிணியுடன் அவர் வயிற்றில் இருந்த குழந்தையும் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்துள்ளது.