தென்காசியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 7 பேர் உயிரிழப்பு; 55 பேர் காயம்
தென்காசியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென்காசி பேருந்து விபத்து
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் துரைசாமிபுரத்தில், தனியார் பேருந்து ஒன்று தென்காசியில் இருந்து ராஜபாளையம் சென்று கொண்டிருந்தது.

கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி எதிர்திசையில் மற்றொரு தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது.
இந்த இரு பேருந்துகளும், இன்று காலை 11 மணியளவில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில், 5 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். 56 பேர் காயமடைந்து மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 5 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்புபணிகளை பார்வையிட்டதோடு, மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்.
முதல்வர் இரங்கல்
இந்த துயர் நிகழ்விற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்காசி கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனைக்குள்ளாகியிருக்கிறேன்.
தென்காசி கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனைக்குள்ளாகியிருக்கிறேன்.
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) November 24, 2025
உடனடியாக, மாவட்டப் பொறுப்பு அமைச்சரான @KKSSRR_DMK அவர்களைத் தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளேன். விபத்து நேர்ந்த இடத்திலிருந்து…
உடனடியாக, மாவட்டப் பொறுப்பு அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களைத் தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளேன். விபத்து நேர்ந்த இடத்திலிருந்து பேசிய மாவட்ட ஆட்சியரை, அரசு மருத்துவமனைக்குச் சென்று, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சையை உறுதிசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன்.
இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்களது குடும்பத்தினர்க்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற அரசு துணை நிற்கும்" என தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், இலேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்க உத்தரவிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |