வயிற்றுக் கொழுப்பை எளிய முறையில் கரைக்க இதோ சில உடற்பயிற்சிகள்! உங்களுக்காக
வயிற்று கொழுப்பால் அவஸ்தைப்படுபவர்களுக்கு சிறு சிறு உடற்பயிற்சிகள் பெரிதும் உதவி புரிகின்றன.
இவற்றை வீட்டில் இருந்தப்படியே செய்யலாம்.
அந்தவகையில் தற்போது எளியமுறையில் செய்யக்கூடிய சில உடற்பயிற்சிகளை இங்கே பார்ப்போம்.
நீள் பயிற்சி (elliptical trainer)
இந்த உடற்பயிற்சி இயந்திரம் தொப்பையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இந்த இயந்திரத்தில் தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்தால், 300 கலோரிகளை கரைக்கலாம்.
உங்கள் வீட்டில் சைக்கிள் இருந்தால், தினமும் அதிகாலையில் சிறிது தூரம் சைக்கிளில் வெளியே பயணம் செய்யுங்கள். ஏனெனில் சைக்கிள் ஓட்டுவதன் மூலம், கால்கள் வலிமையடைவதுடன், குனிந்தவாறு ஓட்டுவதால் வயிற்றில் உள்ள கொழுப்புக்களும் கரையும்.
ரிவர்ஸ் க்ரஞ்ச் (Reverse crunch)
தரையில் படுத்துக் கொண்டு, கால்களை தூக்கி 90 டிகிரி மடக்கி, கைகளை கழுத்திற்கு பின்னால் வைத்துக் கொண்டு, முன்னோக்கி எழும் போது மூச்சை வெளி விடவும், பின்னோக்கி செல்லும் போது மூச்சை உள்ளிழுக்கவும்.
இதேப்போன்று 50-60 முறை தினமும் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
வெர்டிகிள் லெக் க்ரஞ்ச் (Vertical leg crunch)
தரையில் படுத்துக் கொண்டு, கால்களை மேலே தூக்கி, கைகளை தலைக்கு பின்புறம் வைத்துக் கொண்டு, தலையை முன்னோக்கி தூக்க வேண்டும்.
இந்த உடற்பயிற்சியின் போது முன்னோக்கி எழும் போது மூச்சை வெளி விடவும், பின்னோக்கி செல்லும் போது மூச்சை உள்ளிழுக்கவும். இந்த உடற்பயிற்சியையும் 50-60 முறை செய்ய வேண்டும்