தேங்காய் மாவு பற்றி தெரியுமா? இதனை பயன்டுத்துவதால் கிடைக்கும் 5 நன்மைகள் இதோ
அன்றாட வாழ்வில் நாம் மைதா மாவு, கோதுமை மாவு, கடலை மாவு, அரிசி மாவு போன்ற மாவுகளை பயன்படுத்திருப்போம்.
இதை தவிர இன்னும் பல மாவுகள் உள்ளன. அந்த வகையில் ஒன்று தான் இந்த தேங்காய் மாவு.
இந்த தேங்காய் மாவை பயன்படுத்துவதால் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
தயாரிக்கும் முறை
தேங்காய் பால் எடுத்த பின்னர் இருக்கும் தேங்காயை உலர வைத்து மென்மையாக அரைத்து பயன்படுத்துவது தான் இந்த தேங்காய் மாவு.
பேக்கிங்கில் தொடங்கி பல சமையல் ரெசிபிகளில் இந்த தேங்காய் மாவு பயன்படுத்தலாம். சுவையுடன் உணவுக்கு நல்ல நறுமணம் கொடுக்கும்.
கிடைக்கும் நன்மைகள்
பொதுவாக ஒரு நாளைக்கு 30 கிராம் நார்ச்சத்து சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர், தேங்காய் மாவில் உள்ள நார்ச்சத்துக்கள் பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்துகளைக் குறைக்கும்.
தேங்காய் மாவில் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு- 51 இருப்பதால் கோதுமை மாவை விட இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்.
மேலும் தேங்காய் மாவில் கொழுப்பு மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இது இரத்த ஓட்டத்தில் சர்க்கரை வெளியீட்டை மெதுவாக்கும்.
தேங்காய் மாவில் உள்ள கொழுப்பு வகை நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடு கொலஸ்ட்ரால் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு உதவும்.
தேங்காய் மாவில் உள்ள புரதம் உடலின் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி போன்ற செயல்பாடுகளுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |