நேபாளத்தில் மலையேற்றம்: 6 இந்திய சுற்றுலா பயணிகள் மாயம்
6 indian tourists missing during trek in Nepal: நேபாளத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 6 இந்திய சுற்றுலாப் பயணிகள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தில் காணாமல் போன 6 இந்தியர்கள்
நேபாளத்தின் ஆழமான ஏரியான ஷே போக்சுண்டோவிற்கு செல்வதற்கான பயணத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 6 இந்திய சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளனர்.
கடும் பனிப்பொழிவின் காரணமாக காணாமல் போனவர்களில் 2 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக தொடங்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர் கடைசியாக ஷே போக்சுண்டோ கிராமப்புற நகராட்சியின் 4 மற்றும் 8 ம் வார்டுகளுக்கு இடையே உள்ள நும்லா கணவாய் மற்றும் பக்லா கணவாய் பகுதிகளில் பார்க்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போன மலையேறிகளிடம் தொலைபேசி இணைப்பு வசதிகள் இல்லை என்பதால், அவர்களின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து கண்டறிவது கடினமாக உள்ளது.
காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் உதவுவதற்காக நேபாள ராணுவ குழுவினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
வங்காள விரிகுடாவில் அர்னாப் புயல் தாக்கம் தீவிரமாக இருப்பதால் இமயமலை பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.