ஆக்சிஜன் ஆலை திடீரென வெடித்ததில் 6 பேர் பலி! பிரபல நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கர விபத்து
வங்கதேசத்தில் ஆக்சிஜன் ஆலையில் ஏற்பட்ட வெடிப்பு விபத்தில் 6 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
ஆக்சிஜன் ஆலையில் வெடிப்பு
தென்கிழக்கு பங்களாதேஷில் உள்ள ஆக்சிஜன் ஆலை ஒன்றில் சனிக்கிழமையன்று திடீரென வெடிப்பு விபத்து ஏற்பட்டது.
தென்கிழக்கு துறைமுக நகரமான சிட்டகாங்கில் இருந்து 40 கி மீ தொலைவில் இருக்கும் சீதகுண்டாவில் உள்ள ஆக்சிஜன் ஆலையில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டது.
According to Reuters, an explosion at a Sheema oxygen plant in Sitakunda, Bangladesh, killed at least 6 people today. This just confirms my School Boy's Theory of History: it's just one damn thing after another. Take a look:pic.twitter.com/frHMbc6F5H
— Steve Hanke (@steve_hanke) March 4, 2023
வெடிப்பு நிகழ்வு தொடர்பாக சாட்சிகளை மேற்கோள் காட்டி, இரண்டு கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட பகுதியை உலுக்கிய பெரிய வெடி சத்தம் கேட்டது என பொலிஸ் அதிகாரி நய்ஹானுல் பாரி தெரிவித்துள்ளார்.
உயிரிழப்புகள்
தீ விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து ஆறு உடல்கள் மீட்கப்பட்டு இருக்கும் நிலையில், குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர் என உள்ளூர் அரசாங்க அதிகாரி ஷஹாதத் ஹொசைன் ராய்ட்டர்ஸ் இடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வெடி விபத்துக்கான காரணம் என்னவென்று உடனடியாகத் தெரியவில்லை என்று தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.