விபத்துக்குள்ளான புலம்பெயர்வோர் படகு: குழந்தை உட்பட ஆறு பேர் பலி
Six migrants including baby die as speedboat crashes into coast guard: புலம்பெயர்வோர் பயணித்த படகொன்று, கடலோரக் காவல் படையின் படகுடன் மோதி விபத்துக்குள்ளானதில், ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் பலியாகியுள்ளார்கள்.
துருக்கி கடற்கரைக்கு அருகிலுள்ள Agrilia என்னும் கிரீஸ் தீவுக்கு அருகில் பயணித்துக்கொண்டிருந்த படகொன்று, கடலோரக் காவல் படையின் படகுடன் மோதி விபத்துக்குள்ளானதில், ஒரு குழந்தை, ஒரு பெண் மற்றும் நான்கு ஆண்கள் பரிதாபமாக பலியாகியுள்ளார்கள்.
புலம்பெயர்வோர் படகு மோதி விபத்து
நேற்று நள்ளிரவு வாக்கில் புலம்பெயர்வோர் சிலரை ஏற்றிக்கொண்டு Lesvos என்னுமிடத்தை நோக்கி வேகமாகச் செல்ல முயன்ற அந்த படகு, கடலோரக் காவல் படையில் படகொன்றின் மீது மோதி கவிழ்ந்துள்ளது.

படகு கவிழ்ந்ததில், ஒரு குழந்தை, ஒரு பெண் மற்றும் நான்கு ஆண்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்க, தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த நான்கு ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகளை மீட்புக் குழுவினர் மீட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.
மீட்கப்பட்டவர்களில், 37 வயதுடைய துருக்கியைச் சேர்ந்த ஒருவர் ஆட்கடத்தல்காரர் என தெரியவந்ததால், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.