48 மணி நேரத்திற்கு ஒரு முறை: விண்வெளியில் இருந்து இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்
விண்வெளியில் இருந்து இந்தியாவை தீவிரமாக பாகிஸ்தான் உளவு பார்த்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்
கடந்த 16 மாதங்களில் 6 செயற்கைக்கோள்களை சீனாவின் தொழில்நுட்ப உதவி மற்றும் நிதியுதவியின் மூலம் பாகிஸ்தான் விண்ணில் ஏவியுள்ளது.
இந்த செயற்கைக்கோள்கள் இந்தியாவின் எல்லைகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

1961ம் ஆண்டு பாகிஸ்தானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான SUPARCO நிறுவப்பட்டது. ஆனால் நிறுவப்பட்ட பல தசாப்தங்களுக்கு குறைவான செயற்கைக் கோள்களை மட்டுமே பாகிஸ்தான் விண்ணில் செலுத்தி இருந்தது.
ஆனால் கடந்த ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலுக்கு பிறகு,(ஆபரேஷன் சிந்தூர்) அதாவது ஜனவரி 2025 முதல் ஏப்ரல் 2026க்குள் பாகிஸ்தான் 6 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது.
இந்த செயற்கைக்கோள் ஒவ்வொரு 48 மணி நேரத்திற்கும் ஒருமுறை இந்திய நிலப்பரப்பை துல்லியமாக புகைப்படம் எடுத்து பாகிஸ்தானுக்கு வழங்குகிறது. இதன் மூலம் பாகிஸ்தான் உளவு கட்டமைப்பு பல மடங்கு வேகம் அடைந்துள்ளது.

சீனாவின் தொழில்நுட்ப(ராக்கெட்டுகள்) மற்றும் நிதியுதவி மூலம் இந்த செயற்கைக்கோள் திட்டங்களை பாகிஸ்தான் முன்னெடுத்து இருக்கும் நிலையில், பாகிஸ்தான் திரட்டும் உளவு தரவுகளை சீனாவின் யாவோகன் என்ற உளவு அமைப்புக்கு நேரடியாக பகிர்ந்து கொள்ளலாம் என்றும் இந்திய பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
பாகிஸ்தான் சமீபத்தில் ஏவிய PRSC-EO2 மற்றும் PRSC-EO3 ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்க கூடியது. எனவே இவை அதிவேகமாக படங்களை ஆய்வு செய்து இராணுவ தகவல்களை திரட்டுகின்றன எனவும் கூறப்படுகிறது.
COMSPOC என்ற அமெரிக்க விண்வெளி நிறுவனம் நடத்திய ஆய்வில், பாகிஸ்தானில் இருந்து 2026ல் ஏவப்பட்ட PRSC-EO3 செயற்கைக்கோள் உலக அளவிலான கண்காணிப்பு பணிகளை தவிர்த்து விட்டு தெற்காசிய பகுதிகளை மட்டும் குறிவைத்து கண்காணித்து வருவதாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |