சசிகலா மீண்டும் அரசியலுக்கு வாங்க! அடம்பிடிக்கும் 6 பேர்... வெளியான புகைப்படம்
அரசியலை விட்டே ஒதுங்குவதாக சசிகலா அறிக்கை வெளியிட்ட நிலையில் மீண்டும் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ஆதாரவாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
சிறையில் இருந்து கடந்த மாதம் வெளிவந்த சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடுவேன் எனக் கூறியிருந்த நிலையில், அரசியலை விட்டே ஒதுங்குவதாக நேற்று அறிக்கை வெளியிட்டார்.
அவரின் இந்த அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில் முக்கிய அம்சமாக நான் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சசிகலா மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி 6 பேர் தர்ணா போராட்டத்தில் அவர் வீட்டின் முன்பு ஈடுபட்டுள்ளனர்.
பொலிசார் அறிவுறுத்தியும் கலைந்து செல்ல மறுத்து 6 பேரும் அடம் பிடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
