புறப்பட்ட சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: ஆறு பேர் பலி
அமெரிக்காவில், சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த ஆறு பேரும் உயிரிழந்துள்ளார்கள்.
விழுந்து நொறுங்கிய விமானம்
நேற்று அதிகாலை 7.00 மணியளவில், அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்திலுள்ள விமான நிலையம் ஒன்றிலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது.
சுற்றுலா செல்வதற்காக அதில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பயணிக்க, இரண்டு விமானிகளும் விமானத்தில் இருந்துள்ளார்கள்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், அது மரங்களடர்ந்த பகுதி ஒன்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில், ஜோசப் மாக்சின் (63) மற்றும் திமோத்தி பிளேக் (55) என்னும் இரண்டு விமானிகளும், பயணிகளான ஜேம்ஸ் வெல்லர் (67), அவரது மனைவியான வெரோனிகா வெல்லர் (68), தம்பதியரின் மகனான ஜான் வெல்லர் (36) மற்றும் அவரது மனைவியான மரியா வெல்லர் (34) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்டீல் உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு சொந்தக்காரர்களான வெல்லர் குடும்பத்தின் நான்கு உறுப்பினர்களும் விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் உருவாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |