கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் வைட்டமின் ஈ நிறைந்த 6 உணவுகள்: கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க
முடி உதிர்வு என்பது ஆண், பெண் என இருபாலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனையாகும்.
பலரும் முடி வளரவில்லை என்றாலும் கூட பரவாயில்லை ஆனால் முடி உதிர்வு மட்டும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
மேலும் மன அழுத்தம், மரபணு பரிமாற்றம் மற்றும் ஒழுங்கற்ற தலை முடி பராமரிப்பு இதுபோன்ற காரணங்கள் தான் தலை முடி உதிர்வு பிரச்சினைக்கு வழிவகுக்கிறது.
அந்தவகையில், முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் வைட்டமின் ஈ நிறைந்த 6 உணவுகள் குறித்து விரிவாக காணலாம்.
பாதாம்
பாதாமில் தலைமுடியை மிகுந்த ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் வைட்டமின் ஈ, மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட சத்துக்கள் நிரம்பியுள்ளன.
இதில் இருக்கும் வைட்டமின் ஈ, சூரியனால் ஏற்படும் பாதிப்பு உட்பட கூந்தலை பலவித சேதங்களில் இருந்தும் பாதுகாக்கிறது.
Shutterstock
வேர்க்கடலை
வேர்க்கடலையில் கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் வைட்டமின் ஈ, ஜிங்க், பயோட்டின் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.
குறிப்பாக வேர்க்கடலையில் இருக்கும் பயோட்டின் முடி வளர்ச்சியை தூண்டுவதோடு, முடி உதிர்வை தடுக்கிறது.
அவகோடா
அவகேடோ பழங்களில் வைட்டமின் ஈ, வைட்டமின் கே மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது.
இந்த சத்துக்கள் உச்சந்தலை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், முடி உதிர்வை தடுக்கவும் உதவுகிறது.
பச்சையிலை காய்கறிகள்
பச்சை இலை காய்கறிகளில் வைட்டமின் ஈ மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
இவை முடி சேதமடைவதை தவிர்க்கவும், மயிர்க்கால்களை தூண்டி கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.
விதை எண்ணெய்
எள் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்ற விதை எண்ணெய்களில் வைட்டமின் ஈ நிரம்பியுள்ளது.
இந்த எண்ணெய்யை உணவில் சேர்த்து கொள்வது, உச்சந்தலையை மாய்ஸ்ரைஸ் செய்யவும், கூந்தலின் இயற்கை அமைப்பை மேம்படுத்தவும் உதவுகின்றன.
விதைகள்
எள், ஆளிவிதை, சூரியகாந்தி மற்றும் பூசணி விதைகளில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ் நிறைந்துள்ளன.
இவை கூந்தல் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |