கல்லீரல் நோய் இருப்பதை எச்சரிக்கும் 6 அறிகுறிகள்.., என்னென்ன தெரியுமா?
கல்லீரல் நோய் என்பது கல்லீரலைப் பாதிக்கும் பல்வேறு நோய்களாகும்.
இது தொற்று, மரபியல், உடல் பருமன், ஆல்கஹால் துஷ்பிரயோகம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டல கோளாறுகள் போன்ற பல காரணங்களால் ஏற்படலாம்.
அந்தவகையில், கல்லீரல் நோய் இருப்பதை எச்சரிக்கும் பொதுவான சில அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்.\
என்னென்ன அறிகுறிகள்?
கல்லீரலில் உள்ள செல்களில் கொழுப்புக்கள் அதிகம் தேங்கி விரிவடைந்து மற்ற உறுப்புக்களில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால் வயிற்றின் மேல் வலது பக்கத்தில் வலியை உண்டாக்கும்.
கல்லீரலில் உள்ள செல்களில் கொழுப்புக்கள் தேங்கியிருக்கும் போது, உடல் சோர்வை சந்திக்க நேரிடுகிறது.
கல்லீரலில் உள்ள செல்களில் கொழுப்புக்கள் தேங்கி ஒருவித அழுத்தம் இருப்பதால் செரிமானம் பாதிக்கப்பட்டு குமட்டல் அல்லது வயிற்று உப்புசம் ஏற்படும்.

அதேபோல், கல்லீரல் கொழுப்பை கரைக்கும் திறனை இழந்து பலவீனமாக இருந்தால் எதிர்பாராதவிதமாக உடல் எடை அதிகரித்திருக்கும்.
கொழுப்பு கல்லீரலானது மனதளவில் பாதிக்க தொடங்கி ஞாபக மறதி, மனக்குழப்பம் போன்றவை ஏற்படும்.
மேலும், கல்லீரல் சரியாக செயல்படாமல் போனால் கண்களைச் சுற்றி கருவளையங்கள், சருமத்தில் கடுமையான அரிப்பு, கருமையான திட்டுக்கள் போன்றவற்றை ஏற்படும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |