6 வயது சிறுவனை 26 முறை கத்தியால் குத்திக்கொன்ற 71 வயது முதியவர்! இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் நேர்ந்த கொடூரம்
அமெரிக்காவில் 71 வயது முதியவர் ஒருவர் 6 வயது சிறுவனை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவன் கொடூர கொலை
சிகாகோவைச் சேர்ந்த ஜோசப் எம்.சூபா எனும் 71 வயது முதியவர், பக்கத்துக்கு வீட்டிற்குள் திடீரென கத்தியுடன் நுழைந்துள்ளார். அங்கு இருந்த பெண் மற்றும் அவரது 6 வயது மகனை கத்தியால் குத்தியுள்ளார்.
சிறுவனின் தாயார் படுகாயமடைந்த நிலையில், சிறுவனை 26 முறை கொடூரமாக குத்தியுள்ளார் ஜோசப். அப்போது அவர், 'முஸ்லீம்களே நீங்கள் சாக வேண்டும்' என்று கூச்சலிட்டதாக கூறப்படுகிறது.
CAIR-Chicago via X
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கத்தியால் குத்தப்பட்ட தாய் - மகன் இருவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். அவனது தாய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொலையாளியை பொலிஸார் கைது செய்துள்ள நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
உயிரிழந்த சிறுவனின் பெயர் Wadea Al-Fayoume என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இராணுவ பாணியிலான பாரிய கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.
REUTERS
வெறுப்பினால் நேர்ந்த பயங்கரம்
தி வில் கவுண்டி ஷெரிப் அலுவலகம் இந்த சம்பவம் குறித்து அறிக்கை ஒன்றை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது.
அதில், 'இந்த கொடூர தாக்குதலில் பாதிக்கப்பட்ட இருவரும் முஸ்லீம்கள் என்பதாலும், ஹமாஸ் மற்றும் இஸ்ரேலியர்களுக்கு இடையே நடந்து வரும் மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாகவும் சந்தேக நபரால் குறி வைக்கப்பட்டுள்ளனர் என்பதை துப்பறிவாளர்களால் கண்டறிய முடிந்தது' என கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவத்திற்கு ஜனாதிபதி ஜோ பைடன் கடும் கண்டனமும், வேதனையும் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், 'யாரையும் வெறுப்பதற்கு அமெரிக்காவில் இடமில்லை. 6 வயது சிறுவன் கொடூரமாக கொல்லப்பட்டதையும், அவரது தாய் மீது கொலை முயற்சி நடந்ததையும் அறிந்து நானும் ஜில்லும் அதிர்ச்சியடைந்தோம்' என தெரிவித்துள்ளார்.
Jim Vondruska/AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |