பெண்ணின் கண்ணில் இருந்த 60க்கும் மேற்பட்ட புழுக்கள்: மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
சீனாவை சேர்ந்த பெண் ஒருவரின் கண்களில் இருந்து 60 உயிருள்ள புழுக்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.
சீன பெண்ணின் கண்களில் இருந்த புழுக்கள்
சீனாவை சேர்ந்த பெண்ணின் ஒருவரின் கண்களில் இருந்து 60 உயிருள்ள புழுக்களை சீன மருத்துவர்கள் வெளியே எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
சீனாவை சேர்ந்த மிரர் என்ற பெண்ணுக்கு கண்களில் அடிக்கடி எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எரிச்சலை போக்க மிரர் தன்னுடைய கண்களை தேய்த்த போது கண்களில் இருந்து உயிருள்ள புழு ஒன்று வெளியே வந்து விழுந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மிரர் உடனடியாக குன்மிங்கில் உள்ள மருத்துவமனைக்க்கு அணுகியுள்ளார்.
இதையடுத்து பெண்ணை சோதனை செய்த மருத்துவர்கள் பெண்ணின் கண்ணை பரிசோதனை செய்த போது அவரது இரு கருவிழிகளிலும் உயிருள்ள புழுக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இறுதியில் அவரது வலது கண்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட புழுக்களையும், இடது கண்களில் இருந்து 10க்கும் மேற்பட்ட புழுக்களையும் மருத்துவர்கள் எடுத்தனர்.
AP
இறுதியில் 60க்கும் மேற்பட்ட ஒட்டுண்ணிகளை மிரர் கண்களில் இருந்து அகற்றியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக ஈ கடித்தால் பரவும் ஃபிலாரியோடியா வகை ஒட்டுண்ணிகள் மூலம் இந்த வகை பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் என மருத்துவர்கள் நம்புகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |