14 மணி நேரம் TO 7 மணி நேரம்.., ரூ.11,000 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் 600 கிமீ விரைவுச் சாலை
புதிய 600 கிமீ விரைவுச் சாலையால் இரண்டு முக்கிய மாநிலத் தலைநகரங்கள் இணைக்கப்படும்.
விரைவுச் சாலை
உத்தரபிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் தலைநகரங்களான லக்னோ மற்றும் போபாலை இணைக்கும் புதிய விரைவுச் சாலையை அமைக்கும் திட்டங்கள் நடந்து வருகின்றன.
தற்போது, லக்னோவிலிருந்து போபால் வரை இருக்கும் 600 கிலோமீட்டர் தூரம் பயணிக்க, 14 முதல் 15 மணி நேரம் வரை நிலையில் இனி 7 மணிநேரம் மட்டுமே ஆகுமாம்.
கான்பூர்-கப்ராய் நெடுஞ்சாலை, கப்ராய்-சாகர் நெடுஞ்சாலை, சாகர்-போபால் நெடுஞ்சாலை ஆகிய மூன்று பிரிவுகளாக உருவாக்கப்படும் இந்த திட்டமானது 4 முதல் 6 பாதைகளைக் கொண்டிருக்கும்.
நௌபஸ்தா கான்பூர்-கப்ராய் பகுதியை இணைக்கும் வகையில் 124 கிலோமீட்டர் நெடுஞ்சாலை தற்போது கட்டப்பட்டு வருகிறது.
கப்ராயிலிருந்து சாகர் வரை 245 கிலோமீட்டர் நான்கு வழிச்சாலை கட்டுமானத்தில் உள்ள நிலையில் சாகர் முதல் போபால் வரை 150 கிலோமீட்டர் பகுதி நீட்டிக்கப்படும்.

கான்பூர் நகரம், கான்பூர் தேஹாத், ஹமீர்பூர் மற்றும் மஹோபா போன்ற பல முக்கிய மாவட்டங்கள் வழியாக இந்த விரைவுச்சாலை செல்லும் என்று தெரிகிறது.
சுமார் ரூ.11,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ள இந்த விரைவுச்சாலைக்கான பணிகள் ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |