60 கோடி பயனர்கள்! ரூ.99,400 கோடி நிறுவனத்தின் மதிப்பு: யார் இந்த சமீர் நிகம்?
இந்தியாவின் டிஜிட்டல் நிதித் துறையில் 60 கோடி பயனர்களை கொண்ட ஃபோன்பே-வின் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு பின்னால் சக நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சமீர் நிகமின் உழைப்பு அளப்பரியது.
ஃபோன்பே பிரம்மாண்ட வளர்ச்சி
பின்டெக் துறையில் டிஜிட்டல் கட்டண செயலியாக ஃபோன்பே-ஆனது கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.
நிறுவனத்தின் தொடர் வளர்ச்சி சமீபத்தில் 60 கோடி பதிவு செய்யப்பட்ட பயனர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
சமீர் நிகமின் தொலைநோக்கு பார்வை
சமீர் நிகமின் வியூக தொலைநோக்கு, ஃபோன்பேவை ஒரு எளிய ஆன்லைன் கட்டண செயலியிலிருந்து பல்வேறு நிதிச் சேவைகள் வழங்கும் தளமாக மாற்றியுள்ளது.
2023 நிதி திரட்டலில் சுமார் 12 பில்லியன் டொலர் (சுமார் ₹104,316 கோடி) மதிப்புடன், கடந்த பத்தாண்டுகளில் நிறுவனத்தின் வளர்ச்சி மிகப்பெரிய உச்சத்தை தொட்டுள்ளது.
ஃபோன்பே நிறுவனம், யுபிஐ கட்டண சேவைகள் மற்றும் மொபைல் ரீசார்ஜ் சேவைகளுடன் சேர்த்து சொத்து மேலாண்மை, பின்கோட் மூலம் இ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் இன்சூரன்ஸ் போன்ற பல்வேறு பிற நிதி தீர்வுகளை உள்ளடக்கிய சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
சமீர் நிகமின் கடந்து வந்த பாதை
சமீர் நிகம் ஃபோன்பேவின் தலைமைப் பொறுப்பை அடைவதற்கு முன்னதாக பல கடினமான பாதைகளை கடந்து வந்துள்ளார்.
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் மதிப்புமிக்க வார்டன் பிசினஸ் பள்ளியில் MBA பட்டமும், அரிசோனா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்ற் சமீர் நிகமின். ஆரம்பத்தில் ஷாப்ஜில்லா இன்க் நிறுவனத்தில் தயாரிப்பு மேலாண்மை இயக்குநராக பணியாற்றினார்.
பின்னர், 2011 ஆண்டு சமீர் நிகமின் ஸ்டார்ட் அப் நிறுவனமான மைம்360 நிறுவனத்தை பிளிப்கார்ட் நிறுவனம் வாங்கியது.
ஃபின்டெக் நிறுவனம் ஃபோன்பேவை நிறுவுவதற்கு முன்பு, சமீர் நிகம் இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக தளமான பிளிப்கார்ட்டின் பொறியியல் மூத்த துணைத் தலைவர் மற்றும் சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் போன்ற முக்கிய பதவிகளை வகித்தார்.
ஃபோன்பே-வின் தலைமை பொறுப்பேற்ற பிறகு நிறுவனம், 60 கோடி பதிவு செய்யப்பட்ட பயனர்களை அடைந்தது பெரும் சாதனை படைத்தது.
சொத்து மதிப்பு மற்றும் வருவாய்
சமீபத்திய தரவுகள் தெளிவாக கிடைக்காத நிலையில், 2023 மதிப்பீட்டின் படி, ஃபோன்பே நிறுவனத்தின் மதிப்பீடு சுமார் $ 12 பில்லியன் (சுமார் ரூ.99,400 கோடி) ஆகும்.
2024ம் வணிக ஆண்டில் மட்டும் ஃபோன்பே நிறுவனத்தின் வருவாய் ரூ.5000 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது.
அதே ஆண்டு சமீர் நிகம் மற்றும் ராகுல் சாரியின் சம்பளம் 5 கோடியாக குறைந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |