வெறும் 24 மணிநேரத்தில்…600 ரஷ்ய வீரர்கள்: தாண்டவமாடிய உக்ரைனிய படைகள்
600 ரஷ்ய போர் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கெர்சனில் இரத்த ஆறு ஓடும் என உக்ரைன் எச்சரிக்கை.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 600 ரஷ்ய போர் வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் ஒற்றை பகுதியாக அறிவிக்கப்பட்ட கெர்சன் பிராந்தியத்தை கைப்பற்ற ரஷ்ய படைகள் முழுவீச்சில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில் எதிர்வரும் வாரங்களில் உக்ரைன் மற்றும் ரஷ்ய படைகளுக்கு இடையே கடுமையான சண்டை இருக்கும் எனவும் இரத்த ஆறு ஓடும் எனவும் உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.
EPA
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சரியாக 600 ரஷ்ய வீரர்கள் உக்ரைனில் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: ஒவ்வொரு நிலையிலும் உன்னை நேசிக்கிறேன்...விராட் கோலியின் பிறந்த நாளில் உருகும் அனுஷ்கா சர்மா: புகைப்படங்கள்
அதனடிப்படையில் உக்ரைன் ரஷ்யா இடையிலான இராணுவ நடவடிக்கை தொடங்கியதில் இருந்து குறைந்தபட்சம் 75,440 ரஷ்ய வீரர்கள் கலைக்கப்பட்டதாக உக்ரேனிய ஆயுதப்படைகளின் பொது ஊழியர்கள் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
மேலும் நவம்பர் 5 நிலவரப்படி, இந்த போர் நடவடிக்கையில் ரஷ்யா குறைந்தது 2,758 டாங்கிகள், 277 ராணுவ ஜெட் விமானங்கள், 260 ஹெலிகாப்டர்கள், 16 போர்க்கப்பல்கள், 5,601 கவச பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் 399 கப்பல் ஏவுகணைகளையும் இழந்துள்ளது.
Reuters