நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பல வாகன மோதல் விபத்து: உகாண்டாவில் 63 பேர் உயிரிழப்பு
உகாண்டாவில் நடந்த பல-வாகன சாலை விபத்தில் 63 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
பயங்கர சாலை விபத்து
உகாண்டாவின் கம்பாலா-குலு நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட பயங்கர விபத்து சம்பவத்தில் குறைந்தது 63 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக புதன்கிழமை அந்நாட்டு காவல்துறை அறிவித்துள்ளது.
இந்த பயங்கர சாலை விபத்து சம்பவமானது உள்ளூர் நேரப்படி அதிகாலை 12:15 மணிக்கு நிகழ்ந்துள்ளது.
விபத்துக்கான காரணம்
விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் வழங்கிய தகவலில், இரண்டு பேருந்துகள், ஒரு லொறி மற்றும் ஒரு கார் எதிரெதிர் திசையில் வேகமாக முந்தி செல்ல முயன்ற போது இந்த பயங்கர சம்பவம் அரங்கேறி இருப்பதாக தெரிவித்துள்ளது.
பேருந்து ஒன்று மோதல் விபத்தை ஏற்படுத்தியை தொடர்ந்து பல வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் டஜன் கணக்கானோர் உயிரிழந்து இருப்பதுடன், பலர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மேற்கு நகரான கிரியாந்தோங்கோ பிராந்திய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும், விபத்துக்கான சரியான காரணம் குறித்து பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |