646 முறை அதிர்வுகள்! திபெத் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை உயரலாம் என அச்சம்
திபெத்தில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்கு பிறகு 646 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
646 நிலநடுக்கங்கள்
நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் அங்கு பாரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான நிலநடுக்கத்திற்கு பிறகு, புதன்கிழமை நண்பகல் நிலநடுக்கம் மொத்தம் 646 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக பிராந்திய அரசு தெரிவித்துள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில் 188 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரலாம் எனக் கூறப்படுகிறது.
நிவாரணப் பொருட்கள்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் தொலைத்தொடர்பு, சாலைகள் மற்றும் மின்சாரம் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
செவ்வாய்க்கிழமை இரவு சீன செஞ்சிலுவைச் சங்கம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இரண்டாவது தொகுதி நிவாரணப் பொருட்களை ஒதுக்கியது. இதில் பருத்தி கூடாரங்கள், போர்வைகள் மற்றும் மடிப்பு படுக்கைகள் போன்ற 4,300 பொருட்கள் அடங்கும்.
மேலும் சின்ஹுவா செய்தி நிறுவனம் கூறுகையில், "அவசரகால சுகாதார கழிப்பறைகள், கேட்டரிங் வாகனங்கள் மற்றும் கேம்பர் வாகனங்கள் உள்ளிட்ட அவசரகால மீட்புப் பொருட்களைக் கொண்டு 50க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் RCSC-ஆல் அனுப்பப்பட்டனர்" என தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |