65 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மெட்டா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
இந்தியாவில் உள்ள 65 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளை மெட்டா நிறுவனம் முடக்கியுள்ளது.
மெட்டா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
வாட்ஸ் அப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா இந்தியாவில் உள்ள 65 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளை பல்வேறு காரணங்களுக்காக முடக்கியுள்ளது.
இந்தியாவின் புதிய ஐடி விதிகள் 2021க்கு இணங்க, இந்திய சட்டம் மற்றும் வாட்ஸ் அப் ஒழுங்குமுறை விதிகளை மீறிய பயனர்களின் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
Reuters
இதனடிப்படையில் 2023ம் ஆண்டு மே 1ம் திகதி முதல் 31ம் திகதி வரை மட்டும் சுமார் 65,08,000 வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
இதில் 2,420,700 கணக்களிடம் இருந்து முடக்கம் தொடர்பான எத்தகைய புகார்களும் எழுவதற்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட கணக்குகள் தடை செய்யப்பட்டு இருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
புகார் மீது நடவடிக்கை
இந்தியாவில் மட்டும் மொத்தமாக 500 மில்லியன் வாட்ஸ் அப் பயனர்கள் இருக்கும் நிலையில், கடந்த மே மாதத்தில் 3,912 புகார்கள் மட்டுமே பெறப்பட்டது, அவற்றில் வெறும் 297 புகார்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நடவடிக்கை என்பது சம்பந்தப்பட்ட வாட்ஸ் அப் கணக்கு முடக்கப்படும் அல்லது முடக்கப்பட்ட கணக்குகள் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
வாட்ஸ் அப் மூலம் எத்தகைய தவறான பயன்பாடுகளும் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக வாட்ஸ் அப் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 24 லட்சம் கணக்குகளை முடக்கியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |