இனி சாட்களை புதிய போன்களுக்கு எளிதாக மாற்றலாம்: வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட்
இனி வாட்ஸ்அப் பயனர்கள் தங்களது பழைய போனில் இருந்து புதிய ஸ்மார்ட்போனுக்கு மெசேஜ், போட்டோ, வீடியோ மற்றும் ஆடியோ ஆகியவற்றை எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.
வாட்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்
சமூக ஊடக செயலியான வாட்ஸ் ஆப்பை உலகம் முழுவதும் உள்ள சுமார் 200 கோடிக்கும் அதிகமான பேர் உபயோகித்து வருகின்றனர்.
மெட்டா நிறுவனம் தங்களது பயனர்களின் யூசர் பயன்பாட்டை நாளுக்கு நாள் சிறப்பிக்கும் வகையில் தொடர்ந்து புதிய புதிய அப்டேட்டுகளை அறிவித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இனி பயனர்கள் தங்கள் பழைய போனில் இருந்து புதிய ஸ்மார்ட்போனுக்கு தங்களது மெசேஜ், போட்டோ, போன்ற அனைத்தையும் எளிதாக மாற்றி கொள்ள முடியும்.
ஆனால் இந்த அம்சம் தற்போதைக்கு ஆண்ட்ராய்டு டு ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் டு ஐஓஎஸ் என ஒரே இயங்குதளம் கொண்ட மொபைல் போன்களில் மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வாட்ஸ் அப் நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றையும் வெளியீட்டு உள்ளது.
மாற்றும் வழிமுறை
பழைய போனில் இருந்து புதிய ஸ்மார்ட்போனுக்கு மெசேஜ்களை மாற்ற வேண்டும் என்றால், இரண்டு போன்களும் அருகருகே இருக்க வேண்டும், அத்துடன் இரண்டு போன்களும் wi-fiயில் இணைந்து இருக்க வேண்டும்.
லொக்கேஷன் சேவை ஆன்னில் இருக்க வேண்டும் பழைய போனின் வாட்ஸ் ஆப் செயலியில் செட்டிங் அமைப்பிற்குள் சென்று சாட் பிரிவை தேர்வு செய்யவும், பின் அதில் டிரான்ஸ்ஃபர் சாட் ஆப்சனை தேர்வு செய்த உடன் திரையில் க்யூ ஆர் கோடு தோன்றும், அதில் புதிய போனின் வாட்ஸ் அப்பில் ஸ்கேன் செய்ய வேண்டும்.
இதன் மூலம் பயனர்கள் தங்கள் சாட்களை எளிதாக பழைய போனில் இருந்து புதிய ஸ்மார்ட் போனுக்கு மாற்ற முடியும். இதனை பேக்-அப் ஆப்ஷன் மூலமாகவும் ஸ்கேன் செய்து கொள்ள முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |