தண்ணீர் போத்தல் விலை 350 ரூபாய்! வைரலான பெண்ணின் பதிவு
650 மில்லி அளவு கொண்ட தண்ணீர் போத்தல் 350 ரூபாய்க்கு விற்ற சம்பவத்தை இளம்பெண் ஒருவர் ட்விட்டரில் பதிவு செய்தது வைரலாக பரவி வருகிறது.
650 ml தண்ணீர் போத்தல் 350 ரூபாய்:
உலகத்தில் தண்ணீர் தேவை என்பது விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் அத்தியாவசமான ஒன்று. அப்படிப்பட்ட தண்ணீரை நாம் இப்போது விலை கொடுத்து வாங்கும் நிலை வந்துவிட்டது. தமிழகத்தில் பெரும்பாலும், தண்ணீரை போத்தல்களில் அடைத்து விற்பனை செய்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரித்திகா போராஹ் என்ற பெண்மணி தனது ட்விட்டர் பக்கத்தில், "உயர்தர உணவகத்திற்கு மதிய உணவிற்காக சென்றேன். அப்போது அவர்கள் தண்ணீர் போத்தலுக்கு 350 ரூபாயை கட்டணமாக விதித்தனர். போத்தலை மீண்டும் உபயோகிக்கலாம் என்று நான் தண்ணீர் போத்தலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல நினைத்தேன்.
இந்த மாதிரியான நிகழ்வு எனக்கு மட்டும் தான் நடந்துள்ளதா அல்லது உங்களுக்கும் நிகழ்ந்துள்ளதா” என கேள்வி கேட்டு பதிவு செய்துள்ளார்.
வைரலான பதிவு:
அந்த ட்விட்டர் பதிவில், அவர் தண்ணீர் போத்தலின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், தண்ணீர் போத்தலின் விலை 350 ரூபாய் என்றும், மே மாதம் 5-ஆம் திகதி 2023ல் தயாரிக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Met up with a friend at this fancy restaurant for lunch, and you won't believe they charged 350 rps for a bottle of water!
— Ritika Borah (@coach_ritika) July 10, 2023
So, I decided to bring the bottle home with me so that I can reuse it. Is it only me or u have done this too? pic.twitter.com/AecGPLuoV8
மேலும், இது himalayan kingdom of bhutanல் கொண்டு வரப்பட்டது என்றும் தண்ணீர் போத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பெரிய உணவகங்களில் தண்ணீருக்கு அதிக விலை நிர்ணயம் செய்வது உற்றுநோக்கும் வகையில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |