2 ஆண்டுகளுக்கு முன் லொட்டரி டிக்கெட் வாங்கிய நபருக்கு இப்போது அடித்த ஜாக்பாட்! ஆச்சரிய தகவல்
அமெரிக்காவில் கொரோனாவிற்கு முன்பு வாங்கிய லொட்டரி டிக்கெட் மூலம் 65 வயது முதியவர் தற்போது மில்லியனராக மாறியுள்ளார்.
அமெரிக்காவின் சாலிஸ்பரியைச் சேர்ந்த 65 வயது முதியவர்(பெயர் வெளியிடவில்லை) கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு லொட்டரி டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார். ஆனால், கொரோனா பரவல் காரணமாக லொட்டரி சீட்டிற்கான குலுக்கல் திகதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவர் தான் வாங்கிய லொட்டரி டிக்கெட்டுகளை மிகவும் பத்திரமாக பாதுகாத்து வந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு தற்போது லொட்டரி டிக்கெட்டிற்கான பரிசுத் தொகை கொடுத்துள்ளது.
இது குறித்து லொட்டரி மற்றும் கேமிங் கண்ட்ரோல் ஏஜென்சி வெளியிட்டுள்ள செய்தியில், குறித்த 65 வயது மதிக்கத்தக்க நபர் $2,000,000 ரிச்சர் கீறல் லொட்டரி டிக்கெட்டுகளை வாங்கியதன் மூலம், இப்போது மில்லியனராக மாறியுள்ளார்.
ஓய்வு பெற்ற தொழிலாளியான அவர் இது குறித்து கூறுகையில், நான் லொட்டரி டிக்கெட் வாங்கிய பின்பு, திகதி மாற்றப்பட்டதால், அதை நான் பாதுகாக்க பெரும் கஷ்டப்பட்டேன். ஏனெனில் எங்கு தீ ஏதும் பட்டும் டிக்கெட் எரிந்துவிடுமோ, ஒருவேளை டிக்கெட் காலவதியாகவிட்டது என்று கூட வருமோ என்று யோசித்தேன்.
இந்த லொட்டரி டிக்கெட் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விற்பனைக்கு வந்தது. கொரோனா பரவல் இருந்ததால், குலுக்கல் உடனடியாக நடைபெறவில்லை. அதன் பின் 2021-ஆம் ஆண்டு நவம்பர் -1ஆம் திகதி இறுதி திகதியாக மாற்றி அறிவிக்கப்பட்டது.
இவர் வாங்கிய இரண்டு டிக்கெட்டிற்கும் பரிசு விழுந்துள்ளது. முதல் டிக்கெட்டில் அவருக்கு 100 அமெரிக்க டொலரும், இரண்டாவது டிக்கெட்டில் 2 மில்லியன் ஜாக்பாட் பரிசுத் தொகையும் அடித்துள்ளது.
இதே முதியவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு 2 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசுத் தொகையாக விழுந்திருந்தது.
அந்த பரிசுத் தொகையை ஓய்வு காலத்திற்கு பயன்படுத்திய இவர், தற்போது மீண்டும் லொட்டரியில் விழுந்துள்ளதால், இந்த பணத்தை வைத்து தனது வீட்டை விரிவுபடுத்தவும், குடும்பத்துடன் விடுமுறையில் செல்லவும் பயன்படுத்திக் கொள்ள இருப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.