ரஷ்யாவை ஓட ஓட விரட்ட தயார்! தாய்நாடு திரும்பிய 66,000 உக்ரைன் ஆண்கள்!
ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிரான போரில் கலந்து கொள்வதற்காக ஐரோப்பா முழுவதிலுமிருந்து 66,224 உக்ரேனிய ஆண்கள் தாய்நாடு திரும்பியுள்ளனர்.
ரஷ்யா தொடர்ந்து 10-வது நாளாக உக்ரைனில் தாக்குதல் நடத்திவரும் நிலையில், லட்சக்கணக்கான பொதுமக்கள் ரஷ்ய குண்டுவீச்சிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போலந்து, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் ருமேனியா ஆகிய அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர்.
ஆனால், அதற்கு நேர்மாறான விடயங்களும் உக்ரைனில் நடந்துவருகிறது. உக்ரைன் எல்லைகளில் போக்குவரத்து நெரிசல் இருந்துகொண்டே இருக்கிறது. ஏனெனில் போரிலிருந்து தப்பிக்க சென்ற சில உக்ரேனியர்கள் இப்போது வீடு திரும்புகிறார்கள்.
ரஷ்ய தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்காக 66,224 உக்ரேனிய ஆண்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியுள்ளதாக உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணிக்கை, இன்னும் 12 போர் மற்றும் உந்துதல் கொண்ட படைப்பிரிவுகள் என்று கூறிய ஒலெக்ஸி "உக்ரேனியர்களே, நம்மை யாராலும் வெல்லமுடியாது" என கூறினார்.
66224. That's how many men returned from abroad at this moment to defend their Country from the horde. These are 12 more combat and motivated brigades ??! Ukrainians, we are invincible! #FightLikeUkrainian
— Oleksii Reznikov (@oleksiireznikov) March 5, 2022
ஐரோப்பா முழுவதும் வாழும் உக்ரேனியர்களில் பெரும்பாலானோர் ரஷ்யப் படையெடுப்பை எதிர்த்துப் போரிடத் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்புகின்றனர், அவர்களுக்கு போர் அனுபவம் இல்லை, பயிற்சியும் இல்லை, மேலும் சிலரிடம் மட்டுமே சொந்த ஆயுதங்கள் உள்ளன என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
அயர்லாந்தில் வசிக்கும் சில உக்ரேனியர்களும் போலந்துக்கு பறந்து வருகின்றனர், கிராகோவில் இருந்து உக்ரைனுக்கு ஓட்டிச் சென்று போராட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர் என்று RTE தெரிவித்துள்ளது. Photo: Twitter/@1312FAS