வெளிநாட்டில் இருந்து சீனா திரும்பிய 67 வயது முதியவருக்கு Omicron தொற்று உறுதி
சீனாவில் கொரோனாவில் இருந்து உருமாறிய புதிய வகை Omicron மாறுபாடு மொத்தம் 2 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் உள்ள வூஹான் நகரில் தான் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலக நாடுகள் முழுவதும் படையெடுக்க ஆரம்பித்தது. இந்நிலையில் கொரோனா வீரியமே குறையாத நிலையில் கொரோனாவில் இருந்து புதிய வகை வைரஸ் உருவாகியுள்ளது.
இதற்கு Omicron என்று உலக சுகாதாரத்துறை பெயர் சூட்டியுள்ளது. இந்த மாறுபாடு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், பிரித்தானியா போன்ற 77க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த திங்கட் கிழமை சீனாவின் நகரில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய ஒருவருக்கு Omicron தொற்று பரவல் கண்டறியப்பட்டது.
இதையடுத்து நவம்பர் 27ஆம் திகதி வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய 67 வயது முதியவர் ஒருவர் தனிமைப்படுத்தலுக்கு பிறகு மறு பரிசோதனை செய்யப்பட்டார்.
அதில் அவருக்கு Omicron பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து சீனாவில் மொத்தமாக 2 பேருக்கு Omicron பாதிப்பு உறுதியாகியுள்ளது.