ஐரோப்பிய கோட்பாட்டிற்கு முற்றுப்புள்ளி! 67,800 ஆண்டு பழமையான குகை ஓவியம் கண்டுபிடிப்பு
இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கண்டுபிடிப்பு உலக வரலாற்றைப் புரட்டிப் போட்டுள்ளது.
67,800 ஆண்டு பழமையான சுவர் ஓவியம்
நேச்சர்(Nature) இதழில் வெளியிட்ட ஆய்வு ஒன்றில், இந்தோனேசியாவின் சுலவேசி(Sulawesi) தீவில் உள்ள சுண்ணாம்பு குகையில் 67,800 ஆண்டுகள் பழமையான அடர் சிவப்பு நிறத்திலான கை அச்சு ஓவியம் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது முன்னர் சுலவேசியில் கண்டுபிடிக்கப்பட்ட பன்றி ஓவியத்தை விட 15,000 ஆண்டுகள் பழமையானது என்றும், பிரான்ஸில் உள்ள குகை ஓவியங்களை விட 30,000 ஆண்டுகள் பழமையானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தற்போதைய கண்டுபிடிப்பு அதிகாரப்பூர்வமாக உலகின் மிகவும் பழமையான குகை ஓவியமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் இதற்கு நவீன யுரேனியம் - தொடர் காலக்கணிப்பு(Uranium series Dating) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளனர்.
ஆராய்ச்சியை தலைமை தாங்கி நடத்திய கிரிஃபித் பல்கலைக்கழக பேராசிரியர் ஆடம் ப்ரம், கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த ஓவியம் அப்போதைய மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள உறவை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதை பிரதிபலிப்பதாக தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய கோட்பாட்டிற்கு முற்றுப்புள்ளி
ஐரோப்பாவில் தான் 40,000 ஆண்டுகளுக்கு முன்பே கலை சிந்தனை உருவானது என்ற ஐரோப்பிய கோட்பாட்டிற்கு இந்த 65,800 ஆண்டுகள் பழமையான புதிய குகை ஓவிய கண்டுபிடிப்பு முற்றுப்புள்ளி வைத்து உடைத்தெறிந்து உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |