பிரான்சில் அதீத வெப்பம் காரணமாக மின்வெட்டு: 68,000 வீடுகள் இருளில் மூழ்கின
ஐரோப்பாவில் நிலவிவரும் வரலாறு காணாத வெப்பம் காரணமாக, பிரான்சில் மின்வெட்டு ஏற்பட, 68,000 வீடுகள் இருளில் மூழ்கின.
வெப்பம் காரணமாக மின்வெட்டு
வட பிரான்சில் அதீத வெப்பம் காரணமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு பகிரப்படும் அமைப்பொன்றிலுள்ள மின்மாற்றி ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாக 68,000 வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. நேற்றிரவு 9.00 மணியளவில் இந்த பிரச்சினை துவங்கிய நிலையில், இன்று வரை மின் விநியோகம் சீராகவில்லை என கூறப்படுகிறது.
சமீபத்திய ஆண்டுகளில், வெப்பம் காரணமாக இப்படி ஒரு மின்வெட்டு ஏற்பட்டது இதுவே முதல் முறையாகும்.
இதற்கிடையில், பிரான்சில் மின் விசிறிகள், ஏர் கண்டிஷனர்கள் விற்பனை விண்ணைத் தொட்டுள்ளதாம்.
ஏற்கனவே பிரான்சில் 31 இடங்களுக்கு வெப்பம் தொடர்பில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்றும் வெயில் 39 டிகிரி முதல் 41 டிகிரி வரை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |