இந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி அலைகளால் மக்கள் அச்சம்
இந்தோனேசியாவில் ரிக்டர் அளவில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் மொலுக்கா கடல் பகுதியில் பயங்கர ரிக்டர் 7.4 அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் வடக்கு சுலவேசியில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் சில பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரிக்டர் அளவில் 7.4 ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் உருவாகியது, இதனால் கடற்கரையை ஒட்டிய மக்கள் பீதியில் உறைந்தனர்.

இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2004ம் ஆண்டு இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி அலை இந்தியா வரை பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |