7.5 கி.மீ நீளம்; உலகின் நீளமான ரயில் எங்கே ஓடுகிறது தெரியுமா?
உலகின் நீளமான ரயில் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ருத்ராஸ்திரம்
கடந்த ஆகஸ்ட் 7 ஆம் திகதி, ருத்ராஸ்திரம் என்ற இந்தியாவின் நீண்ட ரயிலை கிழக்கு ரயில்வே அறிமுகப்படுத்தியது.
4.5 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த ரயிலில் 7 என்ஜின்கள் மற்றும் 354 பெட்டிகள் உள்ளது.
உத்திரப்பிரதேசத்தின் கஞ்ச்கவாஜா ரயில் நிலையத்தில் இருந்து, ஜார்கண்டின் கர்வா சாலை ரயில் நிலையம் வரை இதன் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. 200 கிமீ நீளத்தை, 5 மணி நேரத்தில் கடந்த இந்த ரயில் மணிக்கு 40 கிமீ வேகத்தில் செல்கிறது.
இதுவே ஆசியாவின் நீளமான ரயிலாகவும் உள்ளது.
உலகின் நீளமான ரயில்
அதேவேளையில், 21 ஜூன் 2001 முதல் இயக்கப்பட்டு வரும், அவுஸ்திரேலிய BHP இரும்பு தாது ரயிலே உலகின் நீளமான ரயிலாக அறியப்படுகிறது.
7.3 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த ரயில், 22 ஈபிள் கோபுர உயரத்திற்கு சமமான நீளம் கொண்டது.
இதில், மொத்தம் 5648 சக்கரங்களும், 682 பெட்டிகளும் உள்ளது. மேலும், இது 1 லட்சம் டன்னுக்கு அதிகமான எடை கொண்டது. அதிகபட்சமாக, 99,734 டன் இரும்பு தாதுவை சுமந்து சென்றுள்ளது.
இதுவே உலகின் நீளமான மற்றும் கனமான ரயில் ஆகும்.
இதில், 7 என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 7 எஞ்சின்களையும் இயக்கம் சிறப்பம்சம் உடையதாகும்.
யாண்டி சுரங்கத்தில் இருந்து போர்ட் லேண்டிற்கு இரும்புதாதுவை கொண்டு செல்லும் இந்த ரயில், 275 கிலோ மீட்டர் தூரத்தை 10 மணி நேரத்தில் கடக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |