£.7.5 மில்லியன் லொட்டரி வெற்றி..!பிரித்தானியாவில் 20 வயது இளைஞர் எடுத்த அதிரடி முடிவு
பிரித்தானியாவை சேர்ந்த 20 வயது இளைஞர் £.7.5 மில்லியன் லொட்டரியை வென்ற பிறகும், தனது வேலையை விடாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
£.7.5 மில்லியன் லொட்டரி
கும்ப்ரியாவின் கார்லிஸ்லே பகுதியை சேர்ந்த 20 வயதான ஜேம்ஸ் கிளார்க்சன் என்ற இளைஞர் சமீபத்தில்(ஜனவரி 4ம் திகதி) தேசிய லொட்டரியில் சுமார் ரூ.7.5 மில்லியன் லொட்டரி அதிர்ஷ்ட தொகையை வென்றுள்ளார்.
லொட்டரி செயலியைப் பயன்படுத்தி கிளார்க்ஸன் தனது அதிர்ஷ்ட எண்களான 16, 19, 22, 24, 27 மற்றும் 35 ஆகியவற்றை தன்னிச்சையாகத் தேர்ந்தெடுத்துள்ளார்.
வேலையை விடாத இளைஞர்
ஆனால் இந்த வெற்றிக்கு பிறகும், பயிற்சி வாயு பொறியாளாரான ஜேம்ஸ் கிளார்க்ஸன் தனது வேலையை விடப் போவது இல்லை என்று தெரிவித்துள்ளார்.
லொட்டரியில் வென்றிருப்பதை அறிந்த அடுத்த நாளே, கடும் குளிரில் நின்று மடைத் தடுப்புகளை சரிசெய்யும் வேலைக்கு சென்றேன்" என்று கிளார்க்ஸன் தெரிவித்துள்ளார்.
"சிலருக்கு இது விசித்திரமாகத் தோன்றலாம், ஆனால் வேலையின் முக்கியத்துவத்தை நான் நம்புகிறேன். ஒரு தகுதிவாய்ந்த வெப்ப பொறியாளராக மாறி என் தொழில் எங்கே செல்கிறது என்று பார்ப்பதே எனது லட்சியம்." என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |