பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி
பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டனாவோ நகரத்தில் ஒன்று 7.4 ரிக்டர் அளவிலான மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் சுமார் 63 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், நகரில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் நில அதிர்வில் குலுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powerful earthquake in the #Philippines
— NEXTA (@nexta_tv) December 2, 2023
Authorities have declared a tsunami threat. No casualties have been reported yet. pic.twitter.com/9AlsOzprij
மேலும் இந்த மிக சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சுனாமி எச்சரிக்கையை அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு விடுத்துள்ளது.
திடீரென ஏற்பட்ட நில அதிர்வில் உயிரிழப்புகள் எதுவும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை.
இதற்கிடையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் தொடர்பாக வெளியான வீடியோ ஆதாரங்களில், கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கி கண்ணாடிகள் கீழே விழுவதை பார்க்க முடிகிறது.
Earthquake hit the kids during a match!!!
— Musa Kayrak (@musakayrak) December 2, 2023
Instant news from the earthquake in the #Philippines #filipinler deprem #erdbeben #EarthquakePH #linog earthquakes #cumartesi #غزة_الآن #BreakingNews #bilig #SonDakika #BreakingNow
pic.twitter.com/qLqPm6lo3D
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |