தென் பசிபிக் நாடொன்றில் பாரிய நிலநடுக்கம்: ஒலித்த சுனாமி எச்சரிக்கை சைரன்கள்
தென் பசிபிக் நாடான டோங்காவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை சைரன்கள் ஒலிப்பதைக் காட்டும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகிவருகின்றன.
NOW: Tsunami sirens sound in Tonga following the recent Major Magnitude 7.6 Earthquake that struck off the coast. pic.twitter.com/sMX0Y3ZjQ0
— Chyno News (@ChynoNews) March 24, 2026
டோங்காவில் பாரிய நிலநடுக்கம்
டோங்கா, தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். அது, 171 தீவுகள் கொண்ட ஒரு நாடு. என்றாலும், அவற்றில் 36 தீவுகளில் மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை.

இன்று டோங்கா நாட்டை, உள்ளூர் நேரப்படி மாலை 5.38 மணியளவில், டிக்டர் அளவுகோலில் 7.6ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது (இப்போது அங்கு இரவு நேரம், அதாவது, சுமார் 10.30 மணி ஆகும்).
தீவுக்கூட்டத்தில் உள்ள Neiafu என்னும் தீவுக்கு 150 கிலோமீற்றர் மேற்கில், 237 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்க, பல இடங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை தற்போது விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
என்றாலும், பாதுகாப்பு கருதி மக்கள் கடற்கரைகளுக்குச் செல்லவேண்டாம் என்றும், உயரமான மற்றும் ஊரின் உள்பகுதிகளுக்குச் செல்லுமாறும் டோங்கா தேசிய பேரிடர் மேலாண்மை அலுவலகம் எச்சரித்துள்ளது.