ஜூன் 1 முதல் அமுலுக்கு வரும் புதிய விதிகள்... அந்த 7 மாற்றங்கள்
ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் அரசாங்கம் சார்பில் புதிய விதிகள் அமுலுக்கு வரும். அந்த வகையில் வருகின்ற ஜூன் 1-ஆம் திகதியும் ஒரு சில மாற்றங்கள் அமுலுக்கு வரவுள்ளன.
சிலிண்டர் விலை
இணையமூடாக மோசடி சமீபமாக அதிகரித்து வருகிறது. இதனால், பண மோசடிகளை தவிர்ப்பதற்காக என்பிசிஐ ஒரு புதிய முறையை செயல்படுத்தத் தயாராகி வருகிறது.

ஒருவருக்கு QR கோடை ஸ்கேன் செய்து பணம் அனுப்பும்போதோ அல்லது அவர்களுடைய மொபைல் இலக்கத்திற்கு பணம் அனுப்பும்போதோ அவர்களுடைய வங்கி கணக்கில் என்ன பெயர் இருக்கிறதோ? அந்த பெயர் காண்பிக்கப்படும்.
இதன் மூலம் தவறான நபருக்கு பணம் அனுப்புவது முற்றிலும் தவிர்க்கப்படும். ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் OMC நிறுவனங்கள் சிலிண்டர் விலைகளில் சில திருத்தங்களைச் செய்யும். அந்த வகையில் ஜூன் 1-ஆம் திகதி அன்றும் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதமே வணிக சிலிண்டர் விலை 993 ரூபாய் உயர்ந்து ஹொட்டல் உரிமையாளர்களுக்கு அதிர்ச்சி தந்தது. இதனால் ஒரு வணிக சிலிண்டரின் விலை ரூ.3,000-த்தைக் கடந்தது. ஆனால் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
இந்த மாதமும் வணிக சிலிண்டர் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
வருகின்ற ஜூன் மாதத்தில் இந்திய ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட இருக்கிறது. இதனால் சுமார் 77 இந்திய ரயில்கள் வரை ரத்து செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு சில ரயில் வழித்தடங்களில் பிரச்சனை இருப்பதால் அந்த வழித்தடங்கள் மாற்றப்படவும் வாய்ப்புள்ளது.
மேலும் மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜார்கண்ட், ஒடிசா போன்ற மாநிலங்களில் இந்த தாக்கம் அதிகமாக இருக்கும்.
வருமான வரித்துறை பான் கார்டு விதிகளில் சில தளர்வுகளையும் அதே நேரத்தில் சில கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்துள்ளது. ஒருவர் ரூ.50,000-த்துக்கும் மேல் வங்கியில் கேஷ் டெபாசிட் செய்தால் இனி பான் கார்டு வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

அதே போல சொத்து பரிவர்த்தனைக்காக பான் கார்டை பயன்படுத்தும் போது இதற்கு முன்னர் ரூ.10 லட்சம் வரையில் பரிவர்த்தனை செய்யலாம். ஆனால் தற்போது இந்த வரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ.45 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து பரிவர்த்தனை செய்யும் போது, கண்டிப்பாக பான் கார்டு வழங்க வேண்டும். பான் கார்டு இல்லாத தனிநபர்கள் இதற்கு முன்பு ஃபார்ம் 60 பயன்படுத்தி வந்தனர். தற்போது அரசு ஃபார்ம் 97-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
ரெப்போ விகிதம்
சில வங்கிகள் தற்போது பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை மாற்றியமைத்து வருகின்றன. அதோடு சில வங்கிகள் தங்களுடைய ஏடிஎம் பரிவர்த்தனை விதிகளில் மாற்றங்களை அறிவித்திருக்கிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி சில டெபிட் கார்டுகளுக்கு மட்டும் பண பரிவர்த்தனை வரம்பை குறைத்துள்ளது.
ஜூன் மாதத்தில் நடக்கவிருக்கும் ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளைப் பொறுத்தே வங்கிகள் ஏடிஎம் சேவை கட்டணங்களை மாற்ற வாய்ப்புள்ளது.
பணவியல் கொள்கை கூட்டம் வருகின்ற ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்தியாவின் பணவீக்கம் மற்றும் பொருளாதாரத்தை பொறுத்து வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படும். ரெப்போ விகிதம் குறைந்தால் வீட்டுக் கடன் இஎம்ஐ-யும் குறையும்.

அதுவே அதிகரித்தால் அதிக வட்டி செலுத்த வேண்டிய நிலை வரலாம். சோலார் பேனல்கள் தொடர்பில் அரசு புதிய "Approved List of Models and Manufacturers" என்ற விதியை ஜூன் 1 முதல் அமுலுக்கு கொண்டு வரவுள்ளது.
இனிமேல் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சோலார் மாடல்களை பயன்படுத்தினால் மட்டுமே அதற்கு மானியம் வழங்கப்படும். தரம் குறைந்த அல்லது அங்கீகரிக்கப்படாத சோலார் பேனல்களுக்கு இந்த சலுகைகள் கிடைக்காது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |