காரில் மீட்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரின் சடலம் - காவல்துறையிடம் சிக்கிய கடிதம்
ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் காரில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
விஷம் அருந்திய குடும்பம்
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த பிரவீன் மிட்டல் என்பவர் தனது குடும்பத்துடன், ஹரியானாவின் பஞ்ச்குலாவில் நடைபெற்ற பாகேஷ்வர் பாபாவின் ஹனுமான் கதா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்துள்ளார்.
நிகழ்ச்சி முடிந்தும் டேராடூன் திரும்பும் வழியில் நள்ளிரவில் ஒரு இடத்தில் காரை நிறுத்தி, பிரவீன் மிட்டல், அவரது மனைவி, பெற்றோர், 2 மகள்கள் மற்றும் மகன் உள்ளிட்ட 7 பேரும் விஷம் அருந்தியுள்ளனர்.
இவர்கள் காருக்குள் உயிருக்கு போராடுவதை கவனித்த அக்கம்பக்கத்தினர், கார் கண்ணாடியை உடைத்து, உள்ளே இருந்தவர்களை மீட்டனர்.
6 பேர் ஏற்கனவே உயிரிழந்திருந்த நிலையில், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஒருவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்துள்ளனர்.
ரூ.20 கோடி கடன்
தகவலறிந்த காவல்துறையினர், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரவீன் மிட்டல் இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு ஸ்கிராப் தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார். ரூ.20 கோடி கடன் காரணமாக அவரது தொழிற்சாலை, 2 அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றை வங்கி பறிமுதல் செய்துள்ளது.
மேலும், கடனை திரும்ப செலுத்த கூறி அழுத்தம் அதிகரித்ததால் குடும்பத்துடன் சேர்ந்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக, 2 பக்கத்திற்கு அவர் எழுதியுள்ள கடிதம் ஒன்றும் காரில் இருந்து காவல்துறையால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |