இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல்: தேவாலயத்தின் அருகே நடந்த துப்பாக்கி சூட்டில் 7 பேர் பலி!
கிழக்கு ஜெருசலேம் பகுதியில் உள்ள தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 7 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேலிய காவல்துறை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் துப்பாக்கி சூடு
இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேமில் உள்ள நிவி யாகோவ் (Neve Yaakov) பகுதியில் உள்ள யூத தேவாலயத்தின் அருகே பயங்கரவாதி ஒருவரால் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது.
இரவு 8: 30 மணியளவில் தேவாலயத்திற்கு அருகில் காரில் வந்த பயங்கரவாதி தான் கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார்.
7 killed, 10 injured in synagogue terror attack in #Jerusalem 🇮🇱
— Israel Foreign Ministry (@IsraelMFA) January 27, 2023
Paramedics have arrived onto the scene and began providing treatment to those injured. pic.twitter.com/CAH9Paiv1B
இதில் 70 வயது முதியவர் மற்றும் 14 வயது சிறுவன் உட்பட மொத்தம் 10 பேர் பலியானதாக அவசரகால பதில் சேவை தகவல் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதி ஒருவரால் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி சூட்டில் இஸ்ரேலியர்கள் பலர் கொல்லப்பட்ட நிலையில் இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
மேலும் இந்த தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதியை சுற்றி வளைத்த இஸ்ரேல் படையினர்
தேவாலயத்தின் அருகே துப்பாக்கி சூட்டை நடத்திவிட்டு பாலஸ்தீனியர்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைய முயற்சித்த பயங்கரவாதியை சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் இஸ்ரேலில் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து சுட்டு வீழ்த்தினர்.
இந்நிலையில் இஸ்ரேலின் ஜெருசலேம் 7 யூதர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மேற்குகரை, காசா முனை ஆகியவற்றில் பாலஸ்தீனியர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெருசலேமில் நடந்த இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இஸ்ரேலில் விரைவில் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இரு எல்லைகளிலும் அதிகப்படியான பதற்றம் நிலவி வருகிறது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.