விமானம் கடலில் விழுந்ததில் இசைக்கலைஞர் உட்பட 7 பேர் உயிரிழப்பு
விமானம் கடலில் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
விமான விபத்து
மத்திய அமெரிக்காவில் உள்ள ஹோண்டுராஸ்(Honduras) நாட்டின் கடற்கரைக்கு அருகே பிரபல சுற்றுலாத்தலமான ரோட்டன்(Roatn) தீவு அமைந்துள்ளது.
Lanhsa விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று ரோட்டனில் இருந்து, 15 பயணிகள் மற்றும் 3 விமான நிறுவன பணியாளர்களுடன் லா செய்பா(La Ceiba) விமான நிலையத்தை நோக்கி கிளம்பியது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், கடலில் விழுந்து விபத்தை சந்தித்துள்ளது. கரையில் இருந்து 1 கிமீ தொலைவில் கடலில் விமானம் விழுந்துள்ளது.
இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேரை மீட்புப்படையினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
உயிரிழந்ததில், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்களும், 2 சிறுவர்களும் அடங்குவர். இதில் புகழ்பெற்ற கரிஃபுனா இசைக்கலைஞர் Aurelio Martínez Suazo உயிரிழந்துள்ளார்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |