வயிற்று கொழுப்பை அதிவேகமாக குறைக்க வேண்டுமா? இந்த பயிற்சிகளை மறக்கமால் செய்து வந்தாலே போதும்
வயிற்று கொழுப்பை கரைக்க ஒரு சில எளிய உடற்பயிற்சிகள் உள்ளன. அவற்றை சரி வர செய்தாலே போதும். எளியமுறையில் தட்டையான வயிற்றை பெற முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.
பை-சைக்கிள் உடற்பயிற்சி
வயிற்றுக் கொழுப்பை கரைக்க உதவும் உடற்பயிற்சிகள் பை-சைக்கிள் பயிற்சி இல்லாமல் நிறைவடையாது.
உடல் கொழுப்பை எரிப்பதில் கார்டியோ உடற்பயிற்சிக்கு 50% பங்குண்டு. அதன்பிறகு அடிவயிற்று தசைகளை வலுப்படுத்த வேண்டும். இதற்கு பை-சைக்கிள் உடற்பயிற்சி பெரிதும் உதவுகிறது.
ரிவர்ஸ் க்ரெஞ்ச்
ஜிம்மில் இருக்கும் உபகரணத்தில் கால்களைப் பொருத்திக் கொண்டு, படுத்துக் கொள்ளவும். பின்னர் கால்களின் பலத்தைக் கொண்டு உடலை மேலே எழும்பச் செய்ய வேண்டும். அப்போது உங்களது முட்டி மற்றும் கால்கள் 90 டிகிரியில் இருக்கும்.
பின்னர் உடலை கீழே இறக்கி, மீண்டும் உயர்த்திச் செய்யவும். இதனை 12-16 முறை என, 1-3 செட்கள் செய்ய வேண்டும்.
வெர்டிகல் லெக் க்ரெஞ்ச்
வயிற்றுக் கொழுப்பைக் கரைக்க உதவும் அற்புதமான உடற்பயிற்சி. உடலை தரையில் நேராக வைத்துக் கொண்டு, கால்களை செங்குத்தாக மேலே உயர்த்த வேண்டும்.
இதன்மூலம் அடிவயிற்று தசைகள் கடினமாகி, உடற்பயிற்சியின் தீவிரம் அதிகரிக்கும். இதனை 12-16 முறை என, 1-3 செட்கள் செய்ய வேண்டும்.
பால் க்ரெஞ்ச்
இதற்கு உடற்பயிற்சி பந்து தேவை. அதன்மீது மேலுடம்பை வைத்துக் கொண்டு, கால்களை தரையில் வைக்கவும். கைகளை தலைக்கு இருபுறமும் வைத்து, உடலை மேலும், முன்பக்கமாகவும் கொண்டு செல்ல வேண்டும். இதனை 12-16 முறை என, 1-3 செட்கள் செய்ய வேண்டும்.