ஃபென்கல் புயலின் கோரத்தாண்டவத்தால் மண்ணில் புதைந்த மக்கள்! தமிழக மாவட்டத்தில் மீட்கப்பட்ட உடல்கள்
தமிழக மாவட்டம் திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கிய 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
மண்சரிவு
ஃபென்கல் புயல் காரணமாக தமிழக மாவட்டம் திருவண்ணாமலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக, அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் மலையில் இருந்து பாறை ஒன்று உருண்டு வந்து வீடுகளின் அருகில் விழுந்தது.
அப்போது ஏற்பட்ட மண்சரிவினால் வீடுகளுக்குள் மழை நீருடன் மண் இறங்கியது. வீட்டின் மீது மண் சரிவு ஏற்பட்டதால் முழுவதமாக மூடப்பட்டது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
வீட்டில் இருந்தவர்களை மீட்கும் பணி தொடங்கியது. பொலிஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் தீவிரமாக செயல்பட்டு புதையுண்டவர்களின் உடல்களை மீட்டனர்.
மொத்தமாக 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், பாறை விழுந்ததால் அவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு உருகுலைந்துள்ளன.
அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அதில் 5 பேர் குழந்தைகள் என்பதும் தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |