இரவில் பரோட்டா சாப்பிட்டு தூங்கிய மாணவி காலையில் மரணம்? கோயம்புத்தூரில் சோகம்
கோயம்புத்தூரில் இரவில் பரோட்டா சாப்பிட்டு தூங்கிய மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி மரணம்
தமிழக மாவட்டமான, கோயம்புத்தூர், துடியலூர் அருகே தொப்பம்பட்டி பிரிவு பேர்லேண்ட்ஸ் குடியிருப்பில் வசிக்கும் தியாகராஜனின் மகள் கீர்த்தனா (22). இவர், மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இவர், இரவு பரோட்டா சாப்பிட்டு உறங்க சென்றதாக தெரிகிறது. பின்னர், இன்று காலையில் கீர்த்தனாவை அவரது பெற்றோர் பார்த்தபோது மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
உடனே, மகளை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக துடியலூர் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவில் மாணவி சாப்பிட்ட பரோட்டாவில் ஏதும் கலப்படம் சேர்க்கப்பட்டுள்ளதா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |