இந்த 7 உணவுகள் அரச குடும்பத்திற்கு தடை - ஏன் தெரியுமா?
நூற்றாண்டுகளுக்கு முன்னர் உலகின் பெரும் பகுதியை ஆட்சி செய்த பிரித்தானிய அரச குடும்பம், இன்றளவும் உலகின் மதிப்புமிக்க அரச குடும்பங்களில் ஒன்றாக உள்ளது.
வசிப்பதற்கு தனி அரண்மனைகள், உயர் அடுக்கு பாதுகாப்புகள் இருந்தாலும் கூட இவர்களின் உணவில் சில கட்டுப்பாடுகள் உள்ளது.
பிரித்தானிய அரச குடும்பத்தினர் 7 உணவுகளை உண்பதில்லை.
கடல் உணவுகள்
நண்டு, இறால், சிப்பிகள் போன்ற கடல் உணவுகளை உண்ண பிரித்தானிய அரச குடும்பத்திற்கு தடை விதிக்கப்படுள்ளது.
இந்த உணவுகள் ஒவ்வாமை மற்றும் உணவு விஷம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், அரச குடும்பத்தினர் நோய்வாய்ப்படாமல் இருக்க இந்த உணவுகள் உண்ண அனுமதியில்லை.
பூண்டு
அரச குடும்ப உணவில் பூண்டு தடை செய்யப்பட்டுள்ளது. பொதுவாக பூண்டு சாப்பிட்டால் சுவாசத்தில் துர்நாற்றம் ஏற்படும்.
அரச குடும்பத்தினர் விருந்தின் போது முக்கிய பிரமுகர்களிடம் நெருங்கி பழக வேண்டியிருக்கும் என்பதால், அரச குடும்ப உணவில் பூண்டு சேர்க்க தடை செய்யப்பட்டது.
இரண்டாம் எலிசபெத் கிட்டத்தட்ட அனைத்து அரச நிகழ்வுகளிலும் பூண்டை தடை செய்தார்.
ஃபோய் கிராஸ்
ஃபோய் கிராஸ் என்பது வாத்தின் கல்லீரலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு உணவாகும்.
ஆனால், இதற்காக வாத்தை கொழுக்க வைக்க கட்டாயப்படுத்தி உணவு அளித்து கொடுமைபடுவதாக விலங்கு நல ஆர்வலர்களால் விமர்சிக்கப்பட்டு வந்தது.
இதன் காரணமாக மன்னர் சார்லஸ் ஃபோய் கிராஸ் உணவிற்கு அரச குடும்பத்தில் தடை விதித்துள்ளார்.
அரிய இறைச்சி
பொதுவாக உணவில் இருந்து பரவும் நோயை தவிர்க்க, பிரித்தானிய அரச குடும்பத்தினர் உணவுகள் நன்றாக சமைக்கப்பட்டிருக்க வேண்டும் என விரும்புவார்கள்.
அதன் காரணமாக, அரிய இறைச்சிகள் அரச குடும்ப உணவில் தடை செய்யப்பட்டுள்ளது.
பாஸ்தா
பாஸ்தா, அரிசி, உருளைக்கிழங்கு ஆகிய உணவுகளை விருந்தில் தவிர்ப்பது தொடர்பாக மறைந்தஇரண்டாம் எலிசபெத் ராணி கடுமையான விதிகளை கொண்டிருந்தார்.
அதற்கு பதிலாக ஆரோக்கியத்திற்காக வறுத்த மீன் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொண்டார்.
வெளிநாடுகளில் குழாய் நீர்
வெளிநாட்டு பயணம் செல்லும் போது, உடல்நல பாதிப்பை தவிர்க்க குழாய் நீரை பயன்படுத்த மாட்டார்கள். எப்போதும் கேன் தண்ணீரை மட்டுமே அருந்துவார்கள்.
சாலையோர உணவுகள்
சாலையோர உணவுகள் கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், அது கட்டுப்பாடற்ற விற்பனையாளர்களிடமிருந்து பெறப்படுவதால் அதன் சுகாதாரம் கேள்விக்குறியதாக உள்ளது.
இதன் காரணமாக சாலையோர உணவுகளை பிரித்தானிய அரச குடும்பத்தினர் உண்பது இல்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |