அமெரிக்கா ராணுவத்தை கலங்கடித்த மர்ம பார்சல் - திறந்ததும் வீரர்களுக்கு உடல்நல பாதிப்பு
ராணுவ தளத்திற்கு வந்த பார்சலை திறந்து பார்த்ததில் வீரர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மர்ம பார்சல்
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இருந்து, 25 கிமீ தொலைவில் உள்ள மேரிலாந்தில் ஆண்ட்ரூஸ் கூட்டு ராணுவ தளம் அமைந்துள்ளது.

இந்த ராணுவ தளம், அமெரிக்க ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகளை கொண்டு செல்வதற்கான முதன்மை விமானத் தளமாகவும் செயல்படுகிறது.
இங்கு வந்த மர்ம பார்சலை திறந்ததில், அங்கிருந்த ராணுவ வீரர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறைந்தபட்சம் 7 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும், அவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வெள்ளை நிறப்பொடி
அந்த பார்சலில் வெள்ளை நிறப்பொடி இருந்ததாக கூறப்படுகிறது.
அதனை ஆய்வு செய்த HAZMAT குழு, முதற்கட்ட சோதனைகளில் உடனடியாக ஆபத்தான பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ளது.

மேலும் அந்த பொடியின் தன்மை குறித்தும், அந்த பார்சல் எங்கிருந்து வந்தது, அதை யார் அனுப்பியது என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணை முடியும் வரை அந்த பகுதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒருநாள் முன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்த தளத்திற்கு வருகை தந்ததாக கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |