போர் நிறுத்தத்தை மீறும் பாகிஸ்தான் - பல்கலைகழகத்தின் மீது ரொக்கெட் தாக்குதல்
போர் நிறுத்தத்தை மீறி ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
பல்கலைகழகத்தின் மீது தாக்குதல்
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கடந்த பிப்ரவரி மாதம் மோதல் வெடித்தது. இதில், இரு தரப்பிலும் சுமார் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர். சுமார் 200க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து இந்த மாதத்தின் தொடக்கத்தில், சீனாவின் மத்தியஸ்தத்தின் கீழ், போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இந்த போர் நிறுத்தத்திற்கு பின்னர், முதல்முறையாக ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் ரொக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது.
سراسیمگی محصلان پوهنتون سید جمالالدین افغان کنر پس از هدف قرار گرفتن توسط نیروهای پاکستانی
— Khaama Press (KP) (@khaama) April 27, 2026
گزارشها از ولایت کنر حاکی است که پس از هدف قرار گرفتن ساحه پوهنتون سید جمالالدین افغان توسط حملات نیروهای پاکستانی، فضای ترس و سراسیمگی در میان محصلان این نهاد آموزشی بهوجود آمده است. pic.twitter.com/cnNLNyXneN
ஆப்கானிஸ்தான், குனார் மாகாணத்தின் தலைநகரான அசாதாபாத்தில் உள்ள வீடுகள் மற்றும் சையத் ஜமாலுதீன் ஆப்கானி பல்கலைக்கழகம் மீது ரொக்கெட் மற்றும் மோர்டார்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததாகவும், மாணவர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தலிபான் துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துள்ளா ஃபித்ரத் "பொது மக்கள், கல்வியாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை குறிவைத்த பாகிஸ்தான் இராணுவ ஆட்சியின் இந்தத் தாக்குதல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும், இவற்றை மன்னிக்க முடியாத போர்க்குற்றங்கள் என அறிவிக்கிறோம்," என்று தெரிவித்தார்.
மத்தியஸ்தராக உள்ள பாகிஸ்தான்
ஆனால், பல்கலைகழகம் மீது தாக்குதல் நடத்தவில்லை என பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான அமைதி பேச்சுவார்தையை பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வரும் சூழலில், பாகிஸ்தானே போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

போர் நிறுத்தத்திற்கு முன்னர் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான மோதலில், ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |