வீட்டு வேலைக்கு மாதம் ரூ.7 லட்சம் சம்பளம்: வெளிநாட்டு காத்திருக்கும் வேலைவாய்ப்பு!
வீட்டு வேலைக்கு மாத சம்பளமாக ரூ. 7 லட்சம் வழங்கப்படுகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா, ஆனால் அது உண்மை தான்.
பெரும்பாலான நேரங்களில் அதிக ஊதியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பலர் வெளிநாடுகளில் வேலை தேடுவது வழக்கம். எனினும், சில சமயங்களில் வாக்குறுதியளிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்படுவதில்லை என்ற புகார்களும் அவ்வப்போது எழுவதுண்டு.
ரூ. 7 லட்சத்துக்கு வீட்டு வேலை
இந்நிலையில், துபாயை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முன்னணி வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அந்த அறிவிப்பில், வீட்டு மேலாளர் பதவிக்கு மாத சம்பளமாக இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 7 லட்சம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு முற்றிலும் உண்மையானது என்றும், சம்பள விவரங்களில் எந்தவிதமான மிகைப்படுத்தலும் இல்லை என்றும் அந்நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
வேலைக்கான பொறுப்புகள்
இந்த வேலை வாய்ப்பானது துபாய் மற்றும் அபுதாபியில் வசிக்கும் இரண்டு முக்கியஸ்தர்களின் (V.I.P.) குடும்பங்களுக்கானது.
இந்த பணியில் சேருபவர்கள் வீட்டில் பணிபுரியும் ஊழியர்களை மேற்பார்வையிடுவதுடன், வீட்டுப் பராமரிப்பு பணிகளை முறைப்படுத்துதல், வரவு செலவு மற்றும் நிதி நிர்வாகத்தை கையாளுதல், குடும்ப விழாக்களுக்கான ஏற்பாடுகளை திட்டமிடுதல் போன்ற பொறுப்புகளையும் மேற்கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த உயர் பொறுப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள், வீட்டு நிர்வாகத்தில் சிறந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்றும், பல்வேறு பணி அழுத்தங்களுக்கு மத்தியிலும் திறமையாக செயல்படக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு குறித்த காணொளி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பல பயனர்கள், உயர் வாழ்க்கை முறை மற்றும் பணியாளர்களின் மதிப்பு குறித்து தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |